உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை

  • சென்னை: ராதாபுரம் தொகுதியில் தனது வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார். இறுதி தீர்ப்பில் தனக்கே வெற்றி கிடைக்கும் என்றும் இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நீதி கேட்டு நெடிய பயணம் போக வேண்டும் என கருணாநிதி சொன்னது போல, நானும் நெடிய பயணத்திற்கு தயாராகி விட்டேன். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை அப்பீல் செய்து தடை ஆணை பெறுவேன் என அதிமுக இன்பதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    Advertisement

    நான்தான் அதிக வாக்குகளை பெற்றேன்

    தபால் வாக்குகளை நிராகரித்தது தவறு என்பதுதான் அவரது பாயிண்ட். ஆனால் ஏன் தபால் வாக்குகளை நிராகரித்தார்கள் என்றால், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அதில் கையெழுத்திட்டு இருக்கிறார். அந்த 203 வாக்குகளும் செல்லாது என்பது எனது வாதம். அப்போது உயர்நீதிமன்றம் சொன்னது என்னவென்றால், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்திடலாம் என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

    அந்த தீர்ப்புக்கு எதிராக நான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றேன். அப்போது உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடத்திக் கொள்ளலாம். ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது என்று கூறியது. வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் நான்தான் அதிக வாக்குகளை பெற்றேன். இது உண்மை. ஆனால் செல்லாத 203 வாக்குகளை அதோடு இணைக்கும்போது அப்பாவு வெற்றி பெற்றார்.

    Advertisement

    விசாரிக்க தேவையில்லை என கூறியது

    அந்த 203 வாக்குகள் செல்லுமா, செல்லாதா என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கொரோனா போன்ற காரணங்களால் காலதாமதமானது. தொடர்ந்து நிலுவையில் இருந்தது. அது மட்டுமல்லாமல் அப்பாவு தரப்பினர் தொடர்ந்து மூன்று முறை வாய்தா வாங்கினர். இந்த சூழலில் இரண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இனி இந்த வழக்கை விசாரிப்பதால் என்ன பலன் என்று கருதி, விசாரிக்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டது.

    அப்படியென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு என்ன ஆகும் என கேட்டதற்கு, சூழ்நிலைக்கு தக்கவாறு உத்தரவை பிறப்பிக்கும் என்று கூறியது. இதனால் சென்னை உயர்நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்யும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது என்றால், நாங்கள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறோம். அது இன்னும் செட் அசைடு ஆகவில்லை என்பதால், இந்த உத்தரவையே நாங்கள் பிறப்பிக்கிறோம் என்று சொல்லி, அப்பாவு வெற்றி பெற்றது செல்லும் என கூறியுள்ளது.

    Advertisement

    கருணாநிதி சொல்லியது போல

    இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். இன்பதுரையிடம் இருந்து எந்த ரெக்கவரியும் கிடையாது. ஆனால் அவருடைய பெயருக்கு பதிலாக அப்பாவு பெயரை போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லியதோடு, அப்பீல் போகலாம், 90 நாட்களுக்குள் நீங்களே அப்பீல் போகலாம் என்று கூறி உத்தரவிட்டுள்ளது.

    எனவே கருணாநிதி சொல்லியது போல, நீதி கேட்டு நெடிய பயணம் போக வேண்டும் என்பது போல நானும் நெடிய பயணத்திற்கு தயாராகி விட்டேன். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நான் அப்பீல் செய்து தடை ஆணை பெறுவேன். இறுதி தீர்ப்பில் நான்தான் வெற்றி பெறுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Inbathurai said he will challenge the Madras High Court verdict in the Supreme Court. Expressing confidence in the legal battle, he maintained that he would ultimately emerge victorious in the long-running dispute over the 2016 Radhapuram election.