வண்டலூரில் அவசரமாக தரையிறங்கிய விமான படை ஹெலிகாப்டர்! வானில் 3 மீட்பு ஹெலிகாப்டர்கள் வட்டம்

  • சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கீரப்பாக்கத்தில் இயந்திர கோளாறு காரணமாக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    Advertisement

    சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இசட் ஏ 1420 என்ற ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

    Advertisement

    இதனால் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் இன்று காலை 9 மணி அளவில் அவசரம் அவசரமாக அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனை சரி செய்து மீட்டு செல்வதற்காக மூன்று ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டபடி ஒரு மணி நேரமாக சுற்றியது.

    இதனை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி இயந்திர கோளாறு சரி செய்வதற்காக தளவாட பொருட்களை இறக்கிவிட்டு சென்றன.

    தொடர்ந்து ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப நிபுணர்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English Summary

    IAF helicopter made emergency landing at Vandalur as it has technical fault. Authorities are investigating the cause of the issue.