4வது மாடியில் இருந்து குதித்ததால் பலி.. சென்னையில் இந்தியன் வங்கி தலைமை மேனேஜர் எடுத்த விபரீத முடிவு

  • சென்னை: சென்னை பாரி முனையில் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் தலைமை மேலாளராக பணியாற்றி வந்தவர் வங்கிகட்டடத்தின் 4வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் கனிஷ்க் பாஜ்பாய் (வயது 57). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி இந்தியன் வங்கியில் தலைமை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    Advertisement

    சென்னை பாரி முனையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் கனிஷ்க் பாஜ்பாய் பணியாற்றி வந்தார். இன்று மாலையில் வங்கி கட்டடத்தின் 4வது மாடிக்கு சென்ற அவர் திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

    இதில் பலத்த காயமடைந்த கனிஷ்க் பாஜ்பாய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து காவலாளி முரளி, கனிஷ்க் பாஜ்பாயை மீட்டு ஆட்டோவில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கனிஷ்க் பாஜ்பாயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுபற்றி அறிந்தவுடன் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வங்கியில் அவருடன் பணியாற்றுவோரிடம் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கனிஷ்க் பாஜ்பாய் மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பாக 15 நிமிடங்கள் வரை அவரது மனைவி மதுவிடம் பேசியது தெரியவந்துள்ளது.

    Advertisement

    இதனால் கனிஷ்க் பாஜ்பாயின் மனைவி மது மற்றும் மகன் கவ்ராஜ் ஆகியோரை வங்கிக்கு வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Indian Bank Chief Manager Suicide: A tragic incident has occurred in which a 57-year-old Chief Manager of Indian Bank, working at the bank's headquarters in Parry's Corner, Chennai, committed suicide by suddenly jumping from the fourth floor of the building.