சென்னை: இந்தியன் ரயில்வேயில் ஏசி கோச்களில் பயணிகளுக்கு பெட்ஷீட், தலையணை, பெட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் பெட்ஷீட்கள் பலவும் திருடு போவதாக புகார்கள் எழுகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2026-க்குள் 1.27 கோடி பொருட்கள் இப்படி காணாமல் போயுள்ளதாம்.
காணாமல் போகும் பெட்ஷீட்கள், தலையணைகளுக்கான பொறுப்பை ஒப்பந்ந நிறுவனங்களே ஏற்று இழப்பை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள், அப்போது பணியில் இருக்கும் ஒப்பந்த நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்கிறதாம்.
ரயில்களில் களவு போவதை தடுக்க அதிரடி நடவடிக்கையை எடுக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமேற்கு ரயில்வே டிவிஷனில்தான் அதிகப்படியான எண்ணிக்கையில் படுக்கை விரிப்புகள், பெட்ஷீட்கள் மாயமாகியுள்ளதால், டிஜிட்டல் முறையில் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாம். அதாவது, பெட்ரோல்கள் வழங்கப்படுவது முதல் அதை மீண்டும் கலெக்ட் செய்வது என அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஆப் (செயலி) வழியாக மெயிண்டயின் செய்யப்படுகிறதாம். ஒவ்வொரு பெட்டிக்கும் டிஜிட்டல் ரெக்கார்டுகள் பராமரிக்கப்படுகின்றன. இப்படி கண்காணிப்பதன் மூலம், கையேடு பதிவேடுகளை மட்டுமே நம்பியிருப்பதை விடுத்து, துணிகள் எங்கே காணாமல் போகின்றன என்பதைக் கண்டறிய இந்த அமைப்பு உதவும் என்றும், இது பொறுப்புணர்வை மேம்படுத்தும் என்றும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். அது போக, ஒவ்வொரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பிற்கும் கியூ ஆர் குறியீடுகள் அச்சடிக்கப்பட்டு, அதை ஒவ்வொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் போதும் ஸ்கேன் செய்து பதிவு செய்யும் நடைமுறையும் கொண்டு வர பரிசீலனை செய்யப்பட்டு வருகிறதாம். அதாவது, பயணிகளுக்கு வழங்குவது முதல் லாண்டரிக்கு செல்வது வரை அனைத்தும் கியூ ஆர் கோடு ஸ்கேன் பதிவுக்கு பிறகே நடைபெறும். இதன் மூலம் மாயமாகும் பொருட்களை எளிதில் டிராக் செய்ய முடியும். அதுபோக சிசிடிவி மூலம் கடுமையான செக்கிங்கும் செய்யப்படுமாம். பல ரயில்வே டிவிஷன்கள், ஏற்கனவே ரயில் பெட்டிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, பொருட்கள் திருடு போகாமல் கண்காணிக்கும் பணியை தொடங்கிவிட்டன. திருட்டை தடுக்கும் முயற்சியாக இந்த பணியை தொடங்கியுள்ளது. தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்திலும், படுக்கை விரிப்புகள் மற்றும் துணிகளை ஏற்றி இறக்கும் பணிகளின் மீதான கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேஷன்கள் மற்றும் பணிமனைகளில் ஆய்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்கள் மாயமானதற்கு யார் பொறுப்பு என்பதை உறுதிப்படுத்த முடிந்த இடங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதேபோல, பயணிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பணியாளர்களும் விழிபுணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பெட்ரோல்களை கவனமுடன் சேகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோக, பயணிகளிடம் திருப்பித்தருவது பற்றி நினைவூட்ட வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கிறார்களாம்.. ராஞ்சி டிவிஷனில் இதற்கு ஒருபடி மெலே போய், பயணிகள் தங்கள் இறங்கும் இடம் வருவதற்கு அரை மணி நேரம் முன்பாக பெட்ரோல்களை ஒப்படைக்க வேண்டுமென்று அச்சிட்டே வழங்கும் பணி தொடங்கிவிட்டது. ரயில்வே போலீசாரும் திடீர் ஆய்வுகளை இரவு நேர பணியில் தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில்வே பொருட்களை திருடுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என்றும் ரயில்வே போலீசார் எச்சரித்து இருக்கிறார்கள்.திருடு போவதை தடுக்க நடவடிக்கை
இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! டிகிரி போதும்.. பொன்னான வாய்ப்பு.. தூள் கிளப்புங்க
ஸ்கேன் செய்து பதிவு செய்யப்படுகிறதாம்
ஐஆர்சிடிசிக்கு விரைவில் புதிய வெப்சைட்.. பட்டைய கிளப்ப போகும் 4 புதிய அம்சங்கள்! பயணிகளுக்கு ஹேப்பி
ஜாமினில் வெளி வர முடியாது
லோயர் பர்த் இனி இவங்களுக்குத்தான்.. ஆமா, ரயிலில் மொபைல் சார்ஜ் போடலாமா? இந்தியன் ரயில்வே சொல்வதென்ன?