இந்தியன் ரயில்வே குட்நியூஸ்.. சென்னை டூ மதுரை செல்வோருக்கு சூப்பர் வசதி! 16, 17 தேதி மிஸ் பண்ணாதீங்க

  • சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்வையொட்டி, பக்தர்கள் அதிக அளவில் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பயணிகள் கூட்டத்தை சமாளிக்க சென்னையில் இருந்து மதுரைக்கு செப்டம்பர் 16-ந்தேதி 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதில் முன்பதிவு வசதியுள்ள 2 சிறப்பு ரெயில்களும், முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளன.. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையை சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவும், சுவாமி தரிசனம் செய்யவும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இதன் காரணமாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோயில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, பக்தர்களின் வசதிக்காக, ரயில் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை

    அந்தவகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, கூடுதல் பயணிகள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் செப்டம்பர் 16 மற்றும் 17-ந்தேதிகளில் இயக்கப்பட உள்ளன. இதில் 2 ரெயில்களில் முன்பதிவு வசதியும், ஒரு ரெயிலில் முன்பதிவு இல்லாத பயண வசதியும் இருக்கும்.

    Advertisement

    முதல் சிறப்பு ரெயிலாக, ரெயில் எண் 06153/06154 டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - மதுரை - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் விரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    மதுரை டூ சென்னை

    ரயில் எண் 06153 செப்டம்பர் 16-ந்தேதி மாலை 4.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06154 செப்டம்பர் 17-ந்தேதி மாலை 3.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். இதில் 2 ஏசி, 2 டயர், 5 ஏசி 3 டயர், 11 ஸ்லீப்பர், 4 பொது 2-ம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம்பெறும்.

    Advertisement

    அடுத்ததாக ரயில் எண் 06157/06158 தாம்பரம் - மதுரை - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 16-ந்தேதி இரவு 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரையை சென்றடையும்.

    ரயில்வே நிர்வாகம் ஸ்பெஷல் வசதி

    மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ந்தேதி இரவு 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயிலில் ஏசி முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு இணைந்த ஒரு பெட்டி, 2 ஏசி 2-டயர், 4 ஏசி 3-டயர், 13 ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் இடம்பெறும்.

    Advertisement

    மூன்றாவதாக ரெயில் எண் 06161/06162 சென்னை கடற்கரை - மானாமதுரை - சென்னை கடற்கரை முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 16-ந்தேதி காலை 10.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இந்த ரயில், அன்று இரவு 11.30 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயில் 12 பெட்டிகளை கொண்ட MEMU ரெயிலாக இருக்கும்.

    முன்பதிவு செய்ய வேண்டிய முதல் 2 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    English Summary

    Indian Railways Good News.. Special Train Facility for Chennai to Madurai Passengers on September 16 and 17