ரயில் கவுண்டர் டிக்கெட்டுக்கும் இன்சூரன்ஸ்.. அக். 27 முதல் சூப்பர் சர்ப்ரைஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

  • சென்னை: ரயிலில் போகும்போது டிக்கெட் வாங்குவதற்கே நிறைய பேர் யோசிப்பதில்லை.. ஆனால், அந்தப் பயணத்தின்போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? அதுவும் குடும்பத்துடன் பயணம் செய்யும்போது இப்படி ஒரு ஆபத்து ஏற்பட்டால், அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்? பயணிகளுக்கு இக்கட்டான நேரத்தில் உதவுவதற்காக ரயில்வே சார்பில் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த காப்பீட்டு வசதி எல்லோருக்கும் ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை. இப்போது அதில்தான் ஒரு முக்கியமான மாற்றம் வரப்போகிறது.. அது என்ன தெரியுமா?

    Advertisement

    கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், ரயில் விபத்துகளைத் தடுப்பது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்

    இந்த வழக்கின் விசாரணையின்போதுதான் ரயில்வே பாதுகாப்பு தொடர்பாகப் பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். ரயில்வே நடைமேம்பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்களைச் சுற்றி வேலி அமைப்பது, விபத்துகளைத் தடுக்க உதவும் கவச் பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்துவது எனப் பல விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்டனர்.

    இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயணக் காப்பீடு பெற முடிகிறது. ஆனால், ரயில் நிலைய கவுண்டரில் நேரடியாக டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு இந்த வசதி இல்லாதது ஏன் என்பதுதான் அந்தக் கேள்வி.

    Advertisement

    சுப்ரீம் கோர்ட் கேள்வி

    முந்தைய விசாரணையின்போது கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனாலும், அதற்கான அறிவிப்பு வெளியாகாததால் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. சாமானிய மக்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் ரயில்வேயின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இந்நிலையில்தான், வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல் ரயில்வே கவுண்டர்களில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்.. ஒருவேளை, இந்த உத்தரவை செயல்படுத்தத் தவறினால், ரயில்வே வாரியமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement
    Special train: நெல்லை டூ சென்னைக்கு சிறப்பு ரயில்.. பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த தெற்கு ரயில்வே

    ரயிலவே கவுண்டர்களில் டிக்கெட்டுகள்

    சரி, இந்த காப்பீட்டால் பயணிகளுக்கு என்ன பலன் என்று கேட்கிறீர்களா? ஏற்கனவே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து காப்பீடு பெறும் பயணிகளுக்கான திட்டத்தில், ரயில் விபத்தில் பயணி உயிரிழந்தாலோ அல்லது நிரந்தரமாக முழு உடல் இயலாமை ஏற்பட்டாலோ ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

    நிரந்தரமாக ஒரு பகுதி உடல் இயலாமை ஏற்பட்டால் ரூ.7.5 லட்சம் வரை கிடைக்கும். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், மருத்துவ செலவுகளுக்காக ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.

    Advertisement

    பயண காப்பீடு வசதி

    ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும்போது, பயண காப்பீட்டை தேர்வு செய்பவர்களுக்கு இப்போது 45 பைசா என்ற குறைந்த கட்டணத்தில் இந்த வசதி கிடைக்கிறது. ஆனால், கவுண்டரில் டிக்கெட் வாங்குபவர்கள் இந்த காப்பீட்டை பெற எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    இனி ரயில் நிலைய கவுண்டரில் டிக்கெட் வாங்குபவர்களுக்கும் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் உத்தரவாகும்.. இதனால், ஆன்லைனில் டிக்கெட் எடுக்க ரியாதவர்கள், நேரடியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட் வாங்கும் சாமானிய மக்களும் இந்த வசதியை பெற வழி ஏற்பட்டுள்ளது.

    Advertisement
    78 நாள் தீபாவளி போனஸ் தருகிறதா மத்திய அரசு? உண்மையில் எவ்வளவு கிடைக்கும்.. ரயில்வே ஊழியர் விளக்கம்

    இன்சூரன்ஸ் யாருக்கு கிடைக்கும்?

    ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இந்தக் காப்பீடு கிடையாது. அதேபோல், சாதாரண ரயில்கள், புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கும் இந்தக் காப்பீடு கிடைக்குமா என்பது குறித்து ரயில்வே துறைதான், தெளிவுபடுத்த வேண்டும்.

    இதனிடையே, பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கவச் பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்துவது, தண்டவாளங்களை சுற்றி வேலி அமைப்பது, நடைமேம்பாலங்கள் கட்டுவது ஆகிய பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற விவரங்களையும் நீதிபதிகள் கேட்டுள்ளது இங்கு கவனம் பெற்றுள்ளது...!!

    English Summary

    Indian Railways Insurance: Counter Ticket Buyers Get New Benefit From October 27! Who Is Eligible?