சென்னை: இந்தியன் ரயில்வே பயணிகளுக்காக ஒரு சூப்பர் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வீட்டுக்கே வந்து பார்சல்களை பெற்றுக்கொள்ளவும், டெலிவரி செய்யவும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. சோதனை திட்டம் வெற்றி பெற்ற நிலையில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற 8 நகரங்களில் இந்த சேவை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வே விரைவில் வீட்டுக்கே வந்து பார்சல்களை டெலிவரி மற்றும் பெற்றுக்கொள்ளும் வசதியை கொண்டு வர முடிவு செய்துள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் சில இடங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது.
சோதனை அடிப்படையிலான திட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 8 நகரங்களில் இந்த சேவையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஐதராபாத், பெங்களூர் மற்றும் புனே என 8 நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். டோர் டூ டோர் பார்சல் டெலிவரி திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் பார்சல்களை அனுப்ப வேண்டும் என்றாலோ, பெற வேண்டும் என்றாலோ ரயில் நிலைய பார்சல் மையங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. ரயில்வே பிரிவு ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து பார்சல்களை டெலிவரி செய்து கொள்வார்கள். அதேபோல அனுப்ப வேண்டியிருந்தால் அவர்களே நேரடியாக வந்து பார்சல்களை பெற்று சென்று விடுவார்கள். இந்த சேவையை பெற ரயில்வே செயலியில் புக் செய்தால் போதும். ரயில் ஒன் செயலி வழியாக பயணிகள் டோர் டூ டோர் பார்சல் சேவைக்கு புக்கிங் செய்யலாம். ரயில்வே இணையதளத்திலும் இதற்கான வசதிகள் உள்ளன. சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை இந்தியன் ரயில்வே மேற்கொள்ள உள்ளது. நகரங்களுக்கு இடையே பார்சல்களைக் கொண்டு செல்லும் பணியை ரயில்வே மேற்கொள்ளும். வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பார்சல்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் வாடிக்கையாளர்களிடம் அவற்றைச் சேர்ப்பது போன்ற பணிகளைத் சரக்குகளை கையாளும் நிறுவனங்கள் மேற்கொள்ளும். வாடிக்கையாளர்கள் ரயில் புறப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே பார்சல் அனுப்ப முன்பதிவு செய்ய முடியும். ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வரையிலும் செய்யலாம். அதன்பிறகு புக் செய்ய முடியாது. லாஜிஸ்டிக் பார்ட்னர் நிறுவனங்கள், பார்சல்களை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொண்டு, ரயில்வே ஊழியர்களிடம், ரயில்கள் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒப்படைத்துவிடுவார்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் கொடுத்து அனுப்பிய பொருட்கள் எப்பொது டெலிவரி செய்யப்படும்.. எங்கே சென்று கொண்டு இருக்கிறது? என்பதை ஆன்லைனில் டிராக் செய்யலாம். உதாரணத்திற்கு அமேசான், பிளிப் கார்ட் போன்ற நிறுவனங்களில் பொருட்களை ஆர்டர் செய்தால் எப்படி டிராக் செய்கிறமோ அதேபோல எங்கே வருகிறது என வாடிக்கையாளர்கள் செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு புக்கிங்கிற்கும் தனித்துவமான 10 டிஜிட் எண்கள் கொடுக்கப்படும். இந்த எண்ணை வைத்து டிராக் செய்யலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக பார்சல்கள் ஓடிபி கொடுத்தால் மட்டுமெ டெலிவரி செய்யப்படும். யுபிஐ, கிரெடிட் கார், டெபிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாக பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. ஒருவேளை புக்கிங் செய்துவிட்டு பிறகு பார்சல்களை அனுப்ப வேண்டாம் என நினைத்தாலும் கேன்சல் செய்யும் வசதியும் உள்ளது. ரூ.10 கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு, ஏனைய தொகை திருப்பி அளிக்கப்படும். அதேநேரத்தில், சரக்குகளை வாங்குவதை கையாளும் நிறுவனத்தின் விதிகளுக்கு தகுந்தபடி இது மாறுதலுக்கு உடையது. ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்பவர்கள், சிறிய வியாபாரிகள், தனி நபர்கள் உள்ளிட்டோருக்கு ரயில்வேயின் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே பார்சல் டெலிவரி சேவையை பயணிகள் சுமூகமாக கையாளும் வகையில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அலைவது தவிர்க்கப்படும்.சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில்..
ஸ்பீக்கர்ல பாட்டு, சத்தமா போன் கால்.. இனி இது நடந்தா ஜெயிலுதான்.. தெற்கு ரயில்வே போட்ட ரூல்ஸ்
டோர் டூ டோர் பார்சல் சேவை
ஆன்லைனில் டிராக் செய்யலாம்
ரயில்வே லோகோ பைலட்களுக்கு.. ஆல்கஹால் சோதனையில் புதிய சிக்கல்! பரிசீலனைக்கு போன விதிமுறை!
ரூ.10 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்
Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது