இந்தியாவில் மதுபான விரும்பிகளிடையே ஏற்பட்ட பெரிய மாற்றம்.. அசைக்க முடியாத இடத்தை பிடித்த பீர்!

  • சென்னை: இந்தியாவின் மதுபான சந்தையில் பீர் விற்பனை மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது. மதுபான விரும்பிகள் பலரும் தற்போது சாதாரண பிராண்டுகளிலிருந்து, பிரீமியம் மற்றும் சூப்பர் பிரீமியம் பிராண்டுகளுக்கு பெருமளவில் மாறி வருகின்றனர்.

    Advertisement

    2026ம் ஆண்டில் மொத்த இந்திய பீர் விற்பனை சந்தையில், பிரீமியம் பீர்களின் பங்கு 22% ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் விலை கொடுக்க தயாராக இருக்கும் நுகர்வோரை கவர நிறுவனங்கள் தீவிரமாக போட்டியிடுகின்றன.

    Advertisement

    வழக்கமாக இந்தியாவில் விஸ்கி, பிராந்தி போன்ற ஆல்கஹால் அதிகமுள்ள மதுபானங்கள்தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால், தற்போது பீர் விற்பனை அந்த இடைவெளியை மிக வேகமாக குறைத்து வருகிறது. 2021-2025க்கு இடையில் பீர் விற்பனை அளவு ஆண்டுக்கு 12% என்கிற விகிதத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இது விஸ்கி போன்ற பிற மதுபானங்களின் வளர்ச்சி வேகத்தை விட இரண்டு மடங்கு வேகமாகும்.

    கிங்ஃபிஷர் மற்றும் ஹைனெகன் பிராண்டுகளை தயாரிக்கும் யுனைடெட் புரூவரீஸ் நிறுவனம், அடுத்த 3-5 ஆண்டுகளில் தனது பிரீமியம் பீர் பிரிவில் ஆண்டுக்கு 20-25% வளரச்சியை எதிர்பார்க்கிறது. இதற்காக மகாராஷ்டிராவில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் புதிய கேனிங் ஆலையை அமைத்து வருகிறது.

    Advertisement

    அதேபோல பட்வைசர் மற்றும் கொரொனா பிராண்டுகளின் தயாரிப்பாளரான ஏபி இன்பெவ் நிறுவனம், ராஜஸ்தானில் ரூ.200 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியிருக்கிறது. பெருநகரங்களை தாண்டி சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் பிரீமியம் பீர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். பீர் விற்பனை இந்த அளவுக்கு அதிகரிக்க மாநில அரசுகளின் கலால் வரி மாற்றங்களும் முக்கிய காரணமாகும்.

    மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் விஸ்கி, ரம் போன்ற ஆல்கஹால் அதிகம்கொண்ட மதுபானங்கள் மீதான வரியை அதிகரித்திருக்கின்றன. ஆனால், குறைவான ஆல்கஹால் கொண்ட பீர் மீதான வரியை அந்த அளவுக்கு உயர்த்தவில்லை. சில சந்தைகளில் வரியை குறைத்திருக்கின்றன. இந்த விலை வித்தியாசம் மது விரும்பிகளை பீர் பக்கம் ஈர்த்திருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2-2.5 கோடி மக்கள் சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயதை அடைகின்றனர். இளம் தலைமுறையினர் தரம் மற்றும் பிராண்ட் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பிரீமியம் பீர் சந்தை இன்னும் பல மடங்கு விரிவடையும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

    English Summary

    Beer sales in India's liquor market have witnessed a massive surge. Many consumers are increasingly shifting from standard brands to premium and super-premium brands.