சென்னை: இந்தியாவில் ஊர் பெயரே இல்லாத ரயில் நிலையம் ஒன்று உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.. நம்பித்தான் ஆக வேண்டும். அப்படியொரு ரயில் நிலையம் நம் நாட்டி தான் உள்ளது. அந்த ரயில் நிலையம் எங்கே இருக்கிறது? பெயர் இல்லாமல் இருப்பதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கும்? என்ன என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள எதுவாக ரயில் நிலையத்திற்குள் நுழையும் முன்பே போர்டு ஒன்றில் ஊர் பெயர் இடம் பெற்று இருக்கும். உள்ளூர் மொழி, ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் ரயில் நிலையங்களில் ஊரின் பெயர்கள் அடங்கிய போர்டு வைக்கப்பட்டு இருக்கும்.
உதாரணத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செல்கிறீர்கள் என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளும் இடம் பெற்று இருக்கும் ஸ்டேஷன் பெயர் ஆங்காங்கே எழுதப்பட்டு இருக்கும். சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். இந்தியாவில் பெயரே இல்லாத ஒரு ரயில் நிலையம் உள்ளது. அந்த ரயில் நிலையம் எங்கே இருக்கிறது. பெயர் இல்லாமல் இருப்பதற்கு பின்னால் உள்ள மர்மம் என்ன என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம். மேற்கு வங்களத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம்தான் பெயரே இல்லாமல் உள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள நேம் போர்டில் எந்த ஊர் பெயரும் இல்லாமல் காலியாக தகவல் பலகை காணப்படுகிறது. ரயில்வே நிலையத்திற்குள் நுழையும் போது பெரிய போர்டு ஒன்றில் வெறும் மஞ்சள் பெயிண்ட் மட்டுமே உள்ளது. இந்த மர்மமான ரயில் நிலையம் பர்த்மான் (Burdwan) மற்றும் போல்பூர் இடையே உள்ளது. கிழக்கு ரயில்வேயின் கீழ் உள்ள இந்த ரயில் நிலையம் பல ஆண்டு காலமாக இப்படித்தான் உள்ளதாம். அந்த ஸ்டேஷனுக்கு அடிக்கடி செல்பவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்வது இல்லை. ஆனால், புதிதாக செல்லும் பயணிகளுக்கு ஊர் பெயரே இல்லாமல் ஸ்டேஷனா.. இது என்னடா இது மர்மமாக இருக்கு.. என்று வியப்புடன் பார்த்து செல்கிறார்கள். சில பயணிகளோ, ஊரின் பெயரை எழுத மறந்துவிட்டார்களா? என கேட்கும் நிகழ்வுகளும் நடக்கின்றதாம். இந்த ரயில்வே நிலையத்திற்கு முதலில் ஸ்டேஷன் அமைந்துள்ள ஊரின் பக்கத்து ஊரின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ரெயின் நகர் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில், பக்கத்து ஊரின் பெயர் எப்படி வைக்கலாம் என்று பிரச்சினை எழுந்துள்ளது. ஒரு குழுவினர் ரெயின் நகர் என்று இருக்க வேண்டும் எனவும் இன்னொரு தரப்பினர் ரெயினா என்று இருக்கட்டும் என பிரச்சினை செய்து இருக்கிறார்கள். இதில் உடன்பாடு எட்டப்படாமல் பூசல் நிலவிக்கொண்டே இருந்த நிலையில், ரெயின்நகர் என்ற பெயர் ஸ்டேஷன் போர்டில் இருந்து அழிக்கப்பட்டது.. ஊரின் பெயர் அழிக்கப்பட்டாலும் ரயில் நிலையம் வழக்கம் போல இயங்க தொடங்கியது. அந்த ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் பயணிகளும் பெரிதாக அதை அலட்டிக்கொள்ளவில்லை. காலப்போக்கில் பெயர் இல்லாத ஸ்டேஷனாகவெ இது இயங்கி தொடங்கிவிட்டதாம். அதேநேரத்தில் புக்கிங் செய்யும் போது ரயில் நிலையத்தின் பெயர் ரயில்வே இணையதளத்தில் காட்டுகிறது. பல ஆண்டுகளாக, பெயரில்லாத இந்த ரயில் நிலையம் சுற்றுலா பயணிகளை கவர தொடங்கிவிட்டது. சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் பலரும் இந்த ஸ்டேஷன் பற்றிய தகவலை பகிர்வதால், வித்தியாசமான இடங்களைப் பார்க்க விரும்பும் பயணிகளை பெரிதும் இந்த ரயில் நிலையம் கவர்ந்து வருகிறது. இந்த ரயில் நிலையத்தை நேரில் காணவே பலர் வருகை தருகிறார்களாம்.பெயர் இல்லா ரயில் நிலையம்
பக்கத்து ஊரின் பெயர்
சுற்றுலாப் பயணிகள் விருப்பம்