முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களின் லிஸ்ட்.. தமிழ்நாடு 3-வது இடம்! முதலிடம் யார்? ஆந்திரா எந்த ஸ்பாட்?

  • சென்னை: முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தரகாண்ட் முதலிடத்தில் உள்ளது. அசாம், இமாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேச கேட்டகிரியில் கோவா, டெல்லி, சண்டிகார் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    Advertisement

    தொழில் முதலீடுகளை பெருக்கி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா இடையே முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    Advertisement

    தமிழ்நாடு 3 ஆம் இடம்

    சமீப காலமாக தொழில் முதலீடுகளில் ஈர்ப்பதில் தமிழ்நாட்டை ஆந்திரா விஞ்சி வருவதாகவும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல தொழில்ற்சாலைகள் ஆந்திரா பக்கம் சென்று இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்க உகந்த சூழலை உருவாக்குவதில் மாநிலங்கள் தீவிரம் காட்டி வரக்கூடிய நிலையில், நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முதலீட்டுக்கு உகந்த மநிலங்களை வரிசைப்படுத்தி நிதி ஆயோக் தலைவர் அசோக்குமார் லகிரி லிஸ்ட் ஒன்றை வெளியிட்டார். அதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடம் வகிக்கிறது. 56.6 புள்ளிகளுடன் குஜராத் டாப்பில் இருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் 53.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு 53.3 புள்ளிகளுடன் இந்த இடத்தில் உள்ளது. ஒடிசா 4-வது இடமும் மத்திய பிரதேசம் 5-வது இடத்திலும் ஆந்திரா 6-வது இடத்திலும் உள்ளன.

    Advertisement

    பின் தங்கிய ஆந்திரா

    அதே நேரத்தில் வட மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமான செயல்பாடுகளை கொண்டதாக பட்டியலிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்ட இந்த பட்டியல் ஒரு மாநிலத்தின் உள்கட்டமைப்பு, வர்த்தக சூழல், வளங்கள், அரசுகளின் கொள்கை, எளிமையான ஒழுங்குமுறை, நிதி வளம் உள்ளிட்ட 8 அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

    சமீப காலமாக தமிழ்நாட்டுடன் ஆந்திரா தொழில் முதலீடுகளை ஈர்க்க கடும் போட்டி நடத்தி வரும் நிலையில் நிதி ஆயோக் பட்டியலில் தமிழ்நாட்டை விட கணிசமான புள்ளிகள் குறைவுடன் ஆந்திரா பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் பாஜக ஆளும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களும் தொழில் முதலீடுகளை பெறுவதில் முதல் இரண்டு இடங்களை பெற்று இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    Industrial Investment: Political parties have recently been criticizing the state, claiming that Andhra Pradesh is overtaking Tamil Nadu in attracting industrial investments and that many factories destined for Tamil Nadu have gone to Andhra Pradesh instead. Amidst this, Tamil Nadu has surpassed Andhra Pradesh to secure the third spot in industrial investments.