விலைவாசி உயர்வில் உச்சம் தொட்ட தமிழ்நாடு.. நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த விளக்கம்!

  • சென்னை: விலைவாசி உயர்வில் தமிழ்நாடு உச்சம் தொட்டது தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கம் கொடுத்துள்ளார். பருவமழை பெய்யாதது, அதிக வெயில், சர்வதேச போர், ரூபாய் வீழ்ச்சி உள்ளிட்ட காரணத்தால் விலைவாசி உயர்வு ஏற்படுவதாக கூறிய மரிய வில்சன், இந்த பிரச்சனை சர்வதேச அளவிலும் இருப்பதாக கூறியுள்ளார்.

    Advertisement

    தேசிய அளவிலான சில்லறை பணவீக்கம் 5.54%ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இது 5.81% ஆக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வு 7.17% ஆகவும், நகர்ப்புறங்களில் 6.53% ஆகவும் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன் மூலமாக தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விடவும் அதிகமாக இருப்பது மக்கள் மத்தியில் அம்பலமாகி இருக்கிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் உணவுப் பொருட்களின் விலையும் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. தவெக ஆட்சி அமைந்த 4 நாட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதால், சாமானிய மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

    ஆனால் அமைச்சர் வெங்கடராமன், தமிழ்நாட்டில் விலைவாசியே உயரவில்லை என்று கூறியது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் மரிய வில்சனிடம் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மரிய வில்சன் பதில் அளிக்கையில், விலைவாசி உயர்வு என்று எதுவும் கிடையாது. பருவமழை, ரூபாயின் வீழ்ச்சி, உலகளாவிய போர் உள்ளிட்டவற்றால் விலைவாசி உயர்ந்துள்ளது.

    Advertisement

    இந்தியா முழுக்க இந்த பிரச்சனை உள்ளது. சிறந்த முதல்வர் இருக்கிறார். விஜய்க்கு மக்கள் மட்டுமே முக்கியம். அதேபோல் மின்சாரத்துறை குறித்து நிர்மல் குமார் முடிவு எடுத்துள்ளார் என்றார். தொடந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் தொடர்பாக ரிவ்யூ செய்வோம். தேவை அதிகரிப்பால், வெளியில் வாங்க வேண்டிய சூழல் உள்ளது.

    அண்டை மாநிலங்களில் முன் கூட்டியே மின்சார ஒப்பந்தம் போட்டுள்ளனர். மார்க்கெட் விலையை விட அதிக ரேட்டுக்கு வாங்கினால் நீங்க கேட்கலாம். ஏதாவது முறைகேடு இருந்தால் கேட்கலாம். அதேபோல் இதன் காரணமாக மின் கட்டணம் எதுவும் உயராது. மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    English Summary

    Inflation: Finance Minister Mariya Wilson Clarifies State’s Stance Amid Record High Price Rise in Tamil Nadu