உளவுத்துறை விஜய் காதில் சொன்ன விஷயம்.. லண்டன் வரை போன திருமா பேச்சு! முதல்வர் என்ன கேட்டார் தெரியுமா

  • சென்னை: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் லண்டனில் முகாமிட்டிருக்கிறார் முதல்வர் விஜய். வெளிநாட்டு பயணம் என்பதால் நிர்வாகப் பணிகளில் இருந்து முழுமையாக விலகியிருக்கிறார் என்று நினைத்துவிட முடியாது. தமிழகத்தில் அன்றாடம் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறாராம். அதை பற்றின ஒரு முக்கியமான எக்ஸ்க்ளூசிவ் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டனில் இருந்தாலும் தினமும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உளவுத்துறை உயரதிகாரியிடம் விவாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம் முதல்வர் விஜய்.

    Advertisement

    முதல்வருடன் லண்டன் சென்றுள்ள அவரது முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், உளவுத்துறை அதிகாரிக்கு ஃபோன் போட்டு அதனை விஜய்யிடம் கொடுக்கிறார்... உடனே உளவுத்துறை அதிகாரியும் அன்றைய தினம் தமிழகத்தில் நடந்துள்ள சம்பவங்களை விஜய்யிடம் ஒன்று விடாமல் விவரிக்கிறார்.

    லண்டனுக்கு போன திருமாவளவன் பேச்சு

    இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களை ஆவேசமாக பேசியிருந்தார். குறிப்பாக, திமுக கூட்டணி உடைந்ததற்கும் விசிக வெளியேறியதற்கும் திமுக தான் காரணம் என்று சொன்னதுடன், கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்ய நான் சொன்னேனா, இல்லையா? என்று திமுகவை நோக்கி கேள்வியை வீசியிருந்தார் திருமாவளவன்.

    Advertisement

    திருமாவின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதாவது, திமுகவை குற்றம்சாட்டுவதற்காக இவர் பேசுவதாக நினைத்துக் கொண்டு, விஜய்யை தாக்கியிருக்கிறார் என்று தவெக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பேசுபொருளானது.

    திருமாவளவன் கல்யாணத்தில் பேசியதை அப்படியே உளவுத்துறை உயரதிகாரி முதல்வர் விஜய்யிடம் விவரித்ததுடன், அது தொடர்பான வீடியோவையும் விஜய்யின் பார்வைக்கு அனுப்பி வைத்து விட்டாராம்..

    திருமா சார் ஏன் இப்படி பேசறார்

    உடனே திருமாவின் இந்த வீடியோ பேச்சினை அதனைக் கேட்ட விஜய், "திருமா சார் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? கரூர் சம்பவம் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? இலாகா மாற்றம் வேண்டும் என அவர் கோரியிருந்தார். இப்போதைக்கு வாய்ப்பில்லை என அவருக்கு தகவல் தந்திருந்தேன். அந்த கோபத்தில் இப்படி பேசுகிறாரா?" என்று தனது செயலாளர் செந்தில்குமார் மற்றும் அருகிலிருந்த தனது ஆலோசகர் விஷ்ணு ரெட்டியிடமும் ஆதங்கப்பட்டுள்ளாராம் விஜய்.

    Advertisement

    அதுமட்டுமல்ல, "போன வாரம் தான், ஆதரவு கட்சிகளின் தலைவர்களோடு கலந்துரையாடியபோது சில விஷயங்களை அழுத்தமாகச் சொன்னேன். அப்படியிருந்தும் ஏன் இப்படி முரண்படுகிறார் திருமா சார்? சென்னை திரும்பியதும், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்ட்ரிக்ட்டாக சில விஷயங்களை தெளிவுப்படுத்திட வேண்டும்" என்றும் சொல்லியிருக்கிறாம் முதல்வர் விஜய்.

    கூடுதல் கனட்ரோல் வருமோ?

    அதாவது, இது திருமாவளவனின் ஒரு பேச்சை பற்றிய தனிப்பட்ட அதிருப்தியாக மட்டுமே விஜய் பார்க்கவில்லை.. கூட்டணியிலுள்ள தலைவர்கள் என்ன பேச வேண்டும், எந்த விஷயத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதில் இனி கூடுதல் கட்டுப்பாடு தேவைப்படுகிறதா என்ற கோணத்திலும் விஜய் இந்த விவகாரத்தை அணுகுவதாக தெரிகிறது.

    Advertisement

    லண்டனில் இருந்து கொண்டே தமிழக அரசியலின் ஒவ்வொரு நகர்வையும் கவனித்து வரும் விஜய், சென்னை திரும்பிய பிறகு கூட்டணி கட்சிகளுடன் நடத்தப்போகும் அடுத்தடுத்த ஆலோசனைகளில் இந்த விவகாரம் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Intelligence Report Reaches Vijay in London.. Thirumavalavan’s Speech Sparks a Crucial Question From CM