ஜொலிக்கும் இந்தியா.. அட நம்ம தமிழ்நாட்டை பாருங்க! சர்வதேச விண்வெளி மையத்தின்‘டைம் லாப்ஸ்' வீடியோ

  • சென்னை: இரவு நேரத்தில் இந்தியாவும், இலங்கையும் மின்னொளியில் ஜொலிப்பதை பூமிக்கு மேல் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையம் வீடியோ எடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது 'டைம் லாப்ஸ்' வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களும், இலங்கையும் முழுவதுமாக தெரிகிறது.

    Advertisement

    பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீடீ்டர் வேகத்தில் இந்த சர்வதேச விண்வெளி மையம் தொடர்ந்து சுழல்கிறது.

    Advertisement

    இந்த சர்வதேச விண்வெளி மையம் பூமியை ஒருமுறை முழுவதுமாக சுற்றி முடிக்க 90 நிமிடங்கள் வரை எடுத்து கொள்ளும். இந்த சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி சர்வதேச விண்வெளி மையம் பூமியை தொடர்ந்து கண்காணித்து வீடியோ, போட்டோவாக எடுத்து வருகிறது. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் இலங்கையை இரவு நேரத்தில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    இதனை 'டைம் லாப்ஸ்' வீடியோவாக நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தின் புவி அறிவியல் மற்றும் ரிமோட் சென்சிங் யூனிட் வீடியோவாக மாற்றி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சர்வதேச விண்வெளி மையம் அரபிக்கடலின் மேல் பறக்கிறது. அப்போது இந்தியாவின் மத்திய பகுதிகள் தெரிகின்றன.

    அதன்படி படிப்படியாக சர்வதேச விண்வெளி மையம் வங்காள விரிகுடாவை நோக்கி பறந்து செல்லும்போது தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் மின்னொளியில் ஒளிர்கின்றன. அதேபோல் இலங்கையும் தெரிகிறது. இந்தியா - இலங்கையை பிரிக்கும் மன்னார் வளைகுடாவும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவில் ஆங்காங்கே பிளாஷ் லைட் அடித்தது போல் வருகிறது. இது மின்னல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The International Space Station, orbiting above Earth, has captured a 'time-lapse' video showing India and Sri Lanka glowing at night. This video has now captured everyone's attention; it clearly displays the southern states of India-including Tamil Nadu-as well as the entire island of Sri Lanka.