சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

  • சென்னை: சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக ஒரு அரசு பதவிக்கு வரும் நிலையில் நிர்வாகங்களில் பல மாற்றங்கள் நிகழும். குறிப்பாக அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள் ஆகியோர் இடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் புதிதாக சில நியமனங்களையும் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.

    Advertisement

    சென்னை காவல் ஆணையராக சில மாதங்களுக்கு முன்பு அருண் ஐபிஎஸ் இருந்தார். அவரை தேர்தல் ஆணையம் மாற்றியது. அதன் பிறகு அபின் தினேஷ் மோடக் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பதவி ஏற்று இருக்கும் நிலையில் சென்னைக்கு புதிதாக காவல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஒரு சில மாதங்களுக்கு முன்பு அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை சென்னை சென்னை போலீஸ் கமிஷனராக தமிழக அரசு நியமித்துள்ளது.

    Advertisement

    சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த அபின் தினேஷ் மோடக் தற்போது சிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    English Summary

    Amalraj IPS has been appointed as the Chennai Police Commissioner. Abin Dinesh Modak, who served as the Chennai Police Commissioner, has been appointed as the ADGP of the CID Crime Branch.