ஈரான் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! சவுதியில் தமிழக மீனவர் மீனவர் பலி! 3 பேர் படுகாயம்.. நடந்தது என்ன?

  • சென்னை: சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தமிழக மீனவர் பலியாகியுள்ளார். சவுதி அரேபியா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருந்த சீர்காழியை சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். கீழமூவர்கரையை சேர்ந்த சங்கர் உள்பட 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    நேற்று முன்தினம் சவுதி அரேபியா கடலில் மீன்பிடித்த போது ஈரான் கடற்கொள்ளையர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மீனவர் மாவீரன் உள்பட சிலர், சவுதி அரேபியா கடல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே தமிழகத்தின் சீர்காழியை சேர்ந்த மீனவர் மாவீரன் பரிதாபமாக பலியானார்.

    மேலும் கீழமூவர்க்கரையை சேர்ந்த சங்கர் என்பவர் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிழைக்க சென்ற இடத்தில் கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர் பலியான சம்பவம் சீர்காழி பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English Summary

    Iranian pirates: A fisherman from Tamil Nadu has been killed in a shooting incident involving Iranian pirates off the coast of Saudi Arabia. The deceased, Maviran, hailed from Sirkazhi and was engaged in fishing in Saudi waters. Three others, including Shankar from Keelamoovarkarai, have been admitted to the hospital with injuries.