ஐஆர்சிடிசி-யில் இனி தட்கல் டிக்கெட் தவிப்புகள் இல்லையா? ஜூலை 15 முதல் வரப்போகும் அந்த புதிய ரூல்ஸ்?

  • சென்னை: வரும் ஜூலை 15 முதல் அதிவேக புதிய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். தட்கல் நேர முடக்கம் மற்றும் ஓ.டி.பி தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? ஏன் இந்த திடீர் உத்தரவு?

    Advertisement

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்கள் முன்னிலையில் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார்.

    Advertisement

    மாணவி கேட்ட அதிரடி கேள்வி

    அப்போது மாணவி ஒருவர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், ஐஆர்சிடிசி வெப்சைட்டில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பொதுமக்கள் சந்திக்கும் பெரும் சிக்கல்களையும், இன்னல்களையும், அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

    குறிப்பாக, அவசர காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரங்களில் இணையதளம் திடீரென முடங்கிவிடுகிறது, பாதுகாப்பு சரிபார்ப்பு குறியீடான கேப்ட்சா முறையில் குழப்பங்கள் நிறைய ஏற்படுகின்றன. பணப் பரிவர்த்தனைக்கான ஓடிபி வருவதற்குள் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுன்றன என்பன போன்ற பல்வேறு குறைபாடுகளை அந்த மாணவி பட்டியலிட்டார்.

    Advertisement

    எப்போது தீர்வு கிடைக்கும்

    இதுபோன்ற குறைபாடுகளால், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாவதை சுட்டிக்காட்டிய மாணவி, இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும் என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

    மாணவியின் இந்த புகாரைக் கேட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த மாணவர்கள் முன்னிலையிலேயே ரயில்வே துறையின் மிக உயரிய அதிகாரிகளுக்கு போனை போட்டார்..

    "மாணவர்கள் அனைவரும் புதிய மற்றும் எளிமையான ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்டை எதிர்பார்க்கிறார்கள். இதனை அடுத்த 30 நாட்களுக்குள் உங்களால் முழுமையாக உருவாக்கித் தர முடியுமா?" என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.

    ஐஆர்சிடிசி இணையதளம்

    அதிகாரிகளுடன் பேசி முடித்த கையோடு, அரங்கில் இருந்த மாணவர்களிடம் மகிழ்ச்சியான அந்த அறிவிப்பை வெளியிட்டார். வரும் ஜூலை 15-ம் தேதி முதல், முற்றிலும் மேம்படுத்தப்பட்ட, அதிவேக புதிய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று அதே மேடையிலேயே மிக உறுதியாக வாக்குறுதி அளித்தார். இது மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுததியது.

    Advertisement

    இதனிடையே, ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த இன்னொரு அதிரடி நடவடிக்கையையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    போலி நிறுவனங்கள் கேட்டரிங்

    ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் தவிர, இதர சில அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் ரயில்களில் பயணிகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான சான்றிதழ் பெறாமலும், எந்தவிதமான சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமலும் சில போலி நிறுவனங்கள் ரயில்களில் சுகாதாரமற்ற உணவுகளை விநியோகிப்பதாகப் பயணிகள் தரப்பில் இருந்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    Advertisement

    இந்த புகார்களைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள், அனுமதியற்ற 14 இ-கேட்டரிங் வெப்சைட்டுகளை கண்டறிந்து அவற்றை அதிரடியாக முடக்கினார்கள்..

    ஃபுட் ஆன் டிராக்

    அதுமட்டுமல்ல, பயணிகள் அனைவரும் தங்களின் பயணத்தின்போது தேவைப்படும் உணவுகளை, ஐ.ஆர்.சி.டி.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம், "ஃபுட் ஆன் டிராக்" மொபைல் செயலி அல்லது ரயில்வே துறையால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட உணவு விநியோகஸ்தர்களிடம் மட்டுமே ஆர்டர் செய்து வாங்க வேண்டும் என்றும், போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    அமைச்சரின் இந்த ஆன்-தி-ஸ்பாட் அறிவிப்பும், அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கையும் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது...!!!

    English Summary

    IRCTC Set to Change Tatkal Booking Rules From July 15! Big Update for Passengers