69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான்

  • சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.. அப்போது, இந்த வழக்கை எந்தவிதமான பாதிப்புமின்றி எதிர்கொண்டு, மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தினார்..

    Advertisement

    தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். காரணம்., 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு நாளை அதாவது மே.27 உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    Advertisement

    69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு

    69% இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், இட ஒதுக்கீடு தொடர்பான சட்டப்போராட்டத்தை எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு முறையைப் பாதுகாப்பதில் தமிழக அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்த கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது..

    தமிழக அரசு தந்த தகவல்

    69 சதவீத இடஒதுக்கீடு என்பது தமிழகத்தின் சமூக நீதிக்கான அடிப்படை உரிமையாகும் என்பதால், அதனை பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், சம்பத் குமார் பங்கேற்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    Advertisement

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில். தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாண்பமை சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    முதலமைச்சர் விஜய் ஆலோசனை

    தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு சட்டம் 45/1994-க்கு எதிராக மாண்பமை சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் 27.05.2026 அன்று விசாரணைக்கு வர உள்ளன.

    இந்நிலையில், நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும் நோக்கில், நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    Advertisement

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வட தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இளைஞர்கள், மாணவர்களின் நலன்

    69 சதவீத இடஒதுக்கீடு என்பது தமிழகத்தின் சமூக நீதிக்கான அடிப்படை உரிமையாகும் என்பதால், அதனை பாதுகாப்பதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்பதை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது..

    Advertisement

    நாளை நடைபெறவுள்ள இந்த வழக்கு விசாரணை, தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.. அரசின் இந்த துரித நடவடிக்கையானது, இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட எடுக்கப்படும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது..

    English Summary

    Is 69% Reservation at Risk? Supreme Court Hearing Tomorrow.. Vijay’s Master Plan Sparks Political Buzz