சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை தற்போது 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார். முதல் மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்திய அவர் இரண்டாவது மாநாட்டை திருச்செந்தூரில் நடத்த இருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு இந்த மாநாடு இருக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமானை போல மது ஒழிப்பு. சுற்றுச்சூழல். மரங்களின் மாநாடு என அதே ரூட்டை அண்ணாமலையும் பின்பற்றி வருகிறார் என்கின்றனர்.
ஆளே இல்லாமல் இருந்த தமிழக பாஜக திடீரென பரபரப்பாக பேசப்பட்டதில், முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. அவர் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், அவரது பெயரும், கட்சியின் பெயரும் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்றன.
திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் நேரடியாக அந்த கட்சிகளை விளாசி பேசியது இளைஞர்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என திமுக தலைவர்களை விடாமல் வெளுத்து வாங்கினார் அண்ணாமலை. இதனால் தமிழக அரசியலில் அண்ணாமலை என்ற பெயர் அடிக்கடி பேசப்படத் தொடங்கியது. ஆனால் காலம் மாற காட்சிகளும் மாறின. தமிழக பாஜக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அதிமுக கூட்டணிக்கு செல்ல டெல்லி தலைமை விரும்பியது. ஆனால் அண்ணாமலை இருந்தால் கூட்டணிக்கு வரமாட்டோம் என அதிமுக தரப்பு கூற, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு அண்ணாமலையின் அரசியல் பயணம் என்னவாகும் என்ற கேள்வி எழத் தொடங்கியது. தேசிய அளவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம், தென்மாநிலங்களை கண்ட்ரோலில் எடுக்கும் அளவுக்கு அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாமல் விலகிக் கொண்டார். குடும்ப சூழல் காரணமாக போட்டியிடவில்லை என அவர் விளக்கம் அளித்தாலும், அரசியல் ரீதியான காரணங்களை அதற்கு காரணம் என்ற அவர், விரும்பிய தொகுதியில் போட்டியிட முடியாததால் போட்டியிலிருந்து முழுமையாக செயல்பட்டதாகவும், குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்ததும் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதற்கிடையே இமயமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை திடீரென டெல்லி தலைமையை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து வி தி லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய அவர் 50 லட்சம் என்ற உறுப்பினர் எண்ணிக்கையை எட்டியவுடன் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் என்றார். ஆனால் தற்போது வரை சுமார் 20 லட்சம் பேர் மட்டுமே அந்த அமைப்பில் இணைந்திருக்கின்றனர். இதற்கிடையே நேற்று முன் தினம் பொள்ளாச்சியில் வி தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏராளமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்த திட்டங்களை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார் என்கின்றனர். அந்த வகையில் முதல் மாநில மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநாடு திருச்செந்தூர் பகுதியில் நடைபெற இருக்கிறது. ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாப்பது, மரம் வளர்ப்பு, நீர்நிலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த மாநாடு இருக்கும் கன்னடா இதற்காக வரும் ஜூலை 17ஆம் தேதி திருச்செந்தூரில் கால்கோல் விழாவும் நடைபெற இருக்கிறது. இதில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் தன்னார்வலர்கள் பங்கேற்ற பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிலையில் மாற்று அரசியல் என்ற பேச்சை முன்னெடுத்து வரும் அண்ணாமலை சீமானின் அரசியல் பாதையை பின்பற்றுகிறாரா? என்ற என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.அண்ணாமலை
தமிழக பாஜக
2026 சட்டமன்ற தேர்தல்
வி தி லீடர்ஸ்
பொள்ளாச்சி மாநாடு
சுற்றுச்சூழல் மாநாடு