எடப்பாடி பழனிசாமி தலையில் இடி? அதிமுகவை புறக்கணித்துவிட்டு தவெகவுக்கு வாக்களித்த பாஜக?

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இடைத்தேர்தல்களில் என்டிஏ கூட்டணி தலைமையான பாஜக, அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் இரு தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

    Advertisement

    மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு எதிர்ப்பலை வீசிய போதிலும் எப்படி முன்னிலை என்பதை பார்க்கலாம். அதாவது மதுராந்தகத்திலஸ் பாமகவுக்கு 15 ஆயிரம் வாக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அன்புமணி தெரிவித்துவிட்டார். எனினும் பாமகவின் வாக்குகளை பெற அன்புமணியை திமுக, தவெக அணுகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திமுக, அதிமுக மீது பாமகவுக்கு அதிருப்தியில் இருப்பதால் அன்புமணி சொல்லாவிட்டாலும் அவர்களது ஓட்டு தவெகவுக்கு செல்லும் என கணிக்கப்பட்டது.

    அதே போல் மதுராந்தகத்தில் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கையில் பிரதிபலித்துள்ளது. மதுராந்தகம் அதிமுக கோட்டை என சொல்லப்பட்ட நிலையில் அங்கு ஒரு ஓட்டை விழுந்துவிட்டது.

    Advertisement

    அதாவது அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக கூட்டணியில் உள்ள பாமகவும், பாஜகவும் வாக்களிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த இரு கட்சிகளுமே தவெகவுக்கு வாக்களித்துவிட்டனராம். விஜய் மதுராந்தகத்தில் ரோடு ஷோ நடத்திய போதே பாமக தொண்டர்கள் விஜய்யை வரவேற்க காத்திருந்தனர். இதிலிருந்தே தலைமை சொல்லாவிட்டாலும் அவர்கள் தவெகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்பட்டது.

    அடித்து தூக்கிய மோடி.. மே வங்கம், அசாமில் வாரி சுருட்டும் பாஜக.. காங்கிரஸ் நிலைமை மோசம்!

    தாராபுரத்திலும் பாஜகவினர் தவெகவுக்கு வாக்களித்ததாக சொல்லப்படுகிறது. தாராபுரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக சார்பில் எல் முருகன் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் கயல்விழி 89,986 வாக்குகளை பெற்று வென்றார். ஆனால் எல் முருகன் 88,593 வாக்குகளை பெற்றார். அதாவது 1,393 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டத்திற்குள்பட்ட தாராபுரத்தில் சமூக வாக்குகள், விவசாயிகள், நெசவாளர்கள் கணிசமாக உள்ளனர். எனவே பாஜக வாக்குகளையும் அப்படியே தவெக பெற்றுவிட்டது.

    கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்கு ஓட்டு போடாமல் தவெகவுக்கு ஏன் பாஜக போட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். பாஜகவை பொருத்தமட்டில் திமுக தோல்வி அடைய வேண்டும். இதற்காகவே தங்கள் ஓட்டுகளை போட்டு தவெகவை ஜெயிக்க வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

    எது எப்படியோ கூட்டணியில் இருந்து கொண்டே பாமகவும் ,பாஜகவும் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

    சமூக ஆதரவையும் இழக்கும் எடப்பாடி பழனிசாமி.. பறிபோகும் கொங்கு மண்டல ஆதரவு.. அடுத்தது என்ன?
    Advertisement

    மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகின. காலை 8 மணி முதலே இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    English Summary

    Is BJP votes transferred to TVK? What happened in by election 2026 Maduranthagam and Dharapuram?