அழுத்தத்திற்கு அடிபணிய விஜய் ஒன்றும் எடப்பாடி இல்லை” - சீண்டிய மாணிக்கம் தாகூர்

  • சென்னை: "முதல்வர் விஜய் என்ன எடப்பாடி பழனிசாமியா? அழுத்தம் கொடுத்தால் பணிந்து போவதற்கு? யாராவது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டால் அவர்கள் தான் எட்டப்பர். அதிமுக, பாமகவை தவிர வேறு யார் எட்டப்பர்கள் என்பதை விரைவில் தெரிவிப்போம்." என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற, மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    Advertisement

    இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் பங்கேற்றனர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீமவைச் சேர்ந்த 37 எம்.பிக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். முதல்வர் விஜய் நடத்திய கூட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது விவாதமாகியுள்ளது.

    மோடி அரசு செயல்படுத்த நினைக்கும், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக இன்று காலை சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்.

    Advertisement

    மாணிக்கம் தாகூர் பேசுகையில், "திமுகவின் புதிய நண்பராக பாஜக நெருங்கி வருகிறது. திமுகவின் எண்ணம் என்ன என்பது குறித்த உண்மை இப்போதுதான் வெளியே வருகிறது. பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா இல்லையா என்பதை மு.க.ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும். முதலில் ஏமாந்தது ஓபிஎஸ், அடுத்தது இபிஎஸ். அடுத்ததாக யார் ஏமாறப் போகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.

    முதல்வர் விஜய் என்ன எடப்பாடி பழனிசாமியா? அழுத்தம் கொடுத்தால் பணிந்து போவதற்கு? யாராவது ஆதரவாக ஓட்டு போட்டால் அவர்கள் தான் எட்டப்பர். அன்புமணியும், தான் எட்டப்பர் என்று ஒப்புக்கொண்டார். அதிமுக, பாஜக, பாமகவை தவிர வேறு யார் எட்டப்பர்கள் என்பதை விரைவில் தெரிவிப்போம். அன்புமணியைப் பொறுத்தவரை பாஜக கொடுக்கும் அசைன்மெண்டை செய்துகொண்டு இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Is Chief Minister Vijay like Edappadi Palaniswami—someone who would yield if pressured? We will soon reveal who else, besides the AIADMK and PMK, are the traitors,” Congress Leader Manickam tagore stated.