டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா?

  • சென்னை: தமிழக முதலமைச்சராக பதவியேற்று 32 நாட்களேயான ஒரு முதலமைச்சர் உடனடியாக எம்.ஜி.ஆராகவோ அல்லது காமராஜராகவோ மாறிவிடுவார் என்று எதிர்பார்ப்பது தவறு, விஜய் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல்களை லேர்னிங் பிராசஸில், அதிகாரிகளைச் சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அத்துடன் ராகவா லாரன்ஸ் அரசியல் வருகை, சிங்கப்பெண் அதிரடி படை குறித்தெல்லாம் விரிவாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    ரங்கராஜ் பாண்டே பேசும்போது, "ராகவா லாரன்ஸ் பேசியதில், ஒரு குறிப்பை தந்துவிட்டார்.. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.. தன்னுடைய பேச்சை தொடங்கிய உடனேயே முதல் வார்த்தையாக 'திருச்சி கிழக்கு' என்றுதான் ராகவா லாரன்ஸ் ஆரம்பிக்கிறார்.

    Advertisement

    ராகவா லாரன்ஸ்

    அதன் பிறகு, விஜய்யை 'அண்ணன்' என்கிறார், 'எனது பார்ட்னர்' என்கிறார், 'நண்பர்' என்கிறார், 'வா, போ என்று பேசிக்கொள்வேன்' என்கிறார்... அனைத்தையுமே சொல்கிறார். அதனால் விஜயுடனான அந்த நெருக்கம் நமக்கு தெரிகிறது. எனவே அவருக்கு தொகுதி வழங்க வாய்ப்பு இருக்கிறது என்பது புரிகிறது.. அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிகின்றன.

    ஏதேனும் ஒரு அதிசயம் நடந்தாலொழிய, திருச்சி கிழக்கில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்று நாம் புரிந்து கொள்ளலாம் அதில் வேறு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது மாறும்.

    Advertisement

    திருச்சி கிழக்கு தவெக வெற்றி பெறுமா

    அப்படி போட்டியிடும்போது, லாரன்ஸ் என்கிற பெயர் சற்று அவருக்கு உதவி செய்யும். ராகவா லாரன்ஸ் என்கிற பிரபலம் என்பதால் அதுவும் அவருக்கு உதவி செய்யும். ஆளுங்கட்சியினருக்கும் அது சற்று உதவி செய்யும். காரணம், விஜய்க்கு இப்பொழுது ஒரு உத்தரவாதமான வெற்றி தேவைப்படுகிறது.. அதற்காக எளிதாகக் கிடைத்துவிடும் வெற்றி அல்ல..

    ஓருவேளை தவெக திருச்சி கிழக்கில் தோற்றால், அது ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர் தோற்றதைப் போல கணக்கிடப்படும். விஜய் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால், தவெக சார்பில் மீண்டும் நின்று தோற்றுவிட்டால், தவெக-விற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என்ற பெயர் வந்துவிடும..

    Advertisement

    அங்கு கணிசமான சிறுபான்மையினரின் வாக்குகள் இருக்கின்றன; எனவே அந்த அரசியல் கணக்கீட்டின் அடிப்படையில் ராகவா லாரன்ஸை திட்டமிட்டு கொண்டு வந்திருக்கலாம்.

    5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும், 4, 3 என்று அதற்குக் கீழே சென்றுவிடக் கூடாது... அத்தகைய ஒரு கணக்கீட்டில்தான் ராகவா லாரன்ஸைத் திருச்சி கிழக்கில் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது.

    பதவியேற்று 32 நாட்களேயான ஒரு முதலமைச்சர் உடனடியாக எம்.ஜி.ஆராகவோ அல்லது காமராஜராகவோ மாறிவிடுவார் என்று எதிர்பார்ப்பது தவறு, விஜய் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல்களை லேர்னிங் பிராசஸில், அதிகாரிகளைச் சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கிறார்.

    Advertisement

    அரசு கொண்டு வந்துள்ள 'சிங்கப்பெண்' திட்டம்

    அரசு கொண்டு வந்துள்ள 'சிங்கப்பெண்' திட்டத்தை வரவேற்கிறேன். அரசின் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தினாலே தமிழ்நாடு உபரி நிலையை எட்டும்.

    தவெக அரசின் சிங்கப்பெண் படை தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்யின் சினிமா பாடல்கள் பின்புல இசையாக இசைக்கப்பட்டது பெரிய சர்ச்சையாகப் பேசப்படுகிறது. ஆனல் அது மிகச் சிறிய விஷயம்.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மேடை ஏறும் போதெல்லாம் 'தமிழே அமுதே' என்று வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டதே, அதுமட்டும் தனிமனித துதி இல்லையா? கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு எத்தனையாவது வரிசையில், கலைஞர் வாழ்த்துப் பாடல் வர வேண்டும் என்ற கேள்விகள் எல்லாம் அப்போது இருந்தன

    Advertisement

    தலைவர்களாக யார் வந்தாலும், அவர்களை குஷிப்படுத்த சுற்றியிருக்கும் அதிகாரிகள் சிலர், 'இந்தத் சினிமா பாடலை போட்டால் முதலமைச்சர் மகிழ்ச்சி அடைவார்' என்று நினைத்துச் செய்யும் இத்தகைய செயல்களைப் பெரிய பிழையாக பார்க்கத் தேவையில்லை, இது சண்டை போடுவதற்கான ஒரு விஷயமும் அல்ல.

    அரசு விழாக்களில் சினிமா பாடல்கள்

    அரசு விழாக்களில் சினிமா பாடல்களைப் பயன்படுத்துவது பெரிய தவறோ அல்லது பிழையோ கிடையாது, சிங்கப்பெண் என்பதே ஒரு சினிமா பாட்டுதான், அது மக்களிடம் எளிதாகச் சென்றடையும் வகையில் கேட்ச்சியாக இருப்பதால் அதில் எந்தத் தப்பும் இல்லை.

    அரசு விழாவில் சினிமா பாடல் என்பதால் பயன்படுத்தக் கூடாதா? என்ற கேள்வியும் எழுகிறது. நாம் அனைவரும் சினிமாவுக்குப் பின்னால் தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம், தமிழகத்தின் அனைத்து முதலமைச்சர்களும் சினிமா திரையிலிருந்து வந்தவர்களைத்தான் தேடுகிறார்கள்.. அடுத்த முதலமைச்சராக போட்டியிடப் பல சினிமா பிரபலங்கள் ஏற்கனவே வரிசையில் நின்றுகொண்டிருக்கும் சூழலில், அரசு விழாவில் சினிமா பாடலைப் போட்டார்களா என்று கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை' என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Is Dancer Raghava Lawrence Targeting Vijay’s Trichy East Constituency? Will Andipatti History Repeat Itself?