சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டுவர தீவிரம் காட்டிய வருகிறாராம்.. ஏற்கனவே கேபி முனுசாமி விட்டு ஆழம் பார்த்த எடப்பாடி தற்போது நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என கேட்டு வருகிறாராம். மிதுனை குறி வைத்துதான் எடப்பாடி அவ்வாறு பேசுகிறார் என்கின்றனர் அதிமுகவினர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதுருவியை சந்தித்தது ஆளும் கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக இருந்த கட்சியை தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் மகளிர் அணி, இளைஞரணி தொழிற்சங்க நிர்வாகிகள் உடன சந்திப்பும் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போதே இந்த விவகாரம் பெரிதானது. கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். புது முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் மகன் கட்சிக்குள் வரவேண்டும். அதற்கு நீங்கள் தடையாக இருக்கக் கூடாது என பேசினார் கேபி முனுசாமி. அதற்கு அங்கிருந்து நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் பொதுவெளியில் வெடித்த நிலையில் வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தில் கட்சியில் இதுவரை எந்த பொறுப்பிலும் இல்லாத மிதுனை பொறுப்பு கொடுப்பது தவறானது என அதிமுகவினர் கொந்தளிக்க ஆரம்பித்தனர். பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எனது மகன் எப்போதும் கட்சி பதவிக்கு வர மாட்டார் எனக் கூறி அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கட்சியில் மகன் பெரிய பதவிக்கு வந்தால் நிச்சயம் எதிர்ப்பு எழும் என தெரிந்ததால் சிறிது காலம் அமைதியாக இருந்த அவர் தற்போது மகனை முன்னிலைப்படுத்த தொடங்கி இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர். குறிப்பாக ஐடி விங் செயலாளர் பதவிக்கு மகனை நியமிக்க விரும்பும் எடப்பாடி பழனிச்சாமி அதனால்தான் தேர்தலின் போது ஐடி விங் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதனால் ஏற்கனவே ஐடிவிங்கில் பணியாற்றிய ராஜ் சத்யன் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். மேலும் கட்சிக்குள் புதியவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாமா? அவர்களை பெரிய பதவியில் அமர்த்தலாம் என அடிக்கடி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வியை எழுப்பி வருகிறார். இதுவும் மகன் மிதுனை குறி வைத்து தான் என்கின்றனர். கட்சியில் தற்போது பெரிய அளவிலான பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில் முக்கிய முகங்கள் ராஜினாமா செய்துள்ளனர். எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. இதனால் மகனை தற்போது கட்சிக்குள் கொண்டு வந்தால் எந்தவித பிரச்சனையும் இருக்காது என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். மேலும் வரும் காலங்களில் அதிமுகவின் முக்கிய நிகழ்வுகளில் மகன் மிதுனை மேடையற்ற எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.கேபி முனுசாமி
அதிமுகவின் 4ஆம் தலைமுறையாகும் மிதுன்? ஓபிஎஸ் மேல தண்ணி பாட்டிலை வீசி.. அப்பவே ப்ளான் போட்ட எடப்பாடி?
எடப்பாடி பழனிச்சாமி
மிதுன்
தவெகவில் இணையும் சிவி சண்முகம்? மாநிலப் பொறுப்பு கேட்டு டிமாண்ட்.. தயக்கம் காட்டும் தவெக தலைமை!
சிவி சண்முகம்
விரைவில் பதவி