இருண்ட காலம்.. கீர்த்தனா மாணவிக்கு அட்வைஸ் செய்யும் கேப்பில்.. முதலீடுகளை அள்ளிச்செல்லும் ஆந்திரா!

  • சென்னை: தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டிய முதலீடுகளை தமிழக அரசு இழுக்காமல் மெத்தனமாக இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அது தொடர்பான பணிகளை செய்யாமல்.. பள்ளிகளில் சென்று ஆய்வு செய்வது, அதை வீடியோவாக வெளியிடுவது, அந்த சர்ச்சைக்கு பதில் சொல்வது என்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

    Advertisement

    தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பள்ளி ஆய்வின் போது அரசுப் பள்ளி மாணவியை ஆங்கிலம் பேசச் சொல்லி வற்புறுத்திய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஆனால், இந்த சர்ச்சையைத் தாண்டி, தமிழகத்திற்கு வரவேண்டிய பெரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குத் தடம் மாறிச் செல்லும் சூழலில், தொழில்துறை அமைச்சர் எங்கே கவனம் செலுத்துகிறார் என்ற காரசார விவாதம் தற்போது தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல் அரங்கில் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

    கீர்த்தனாவின் சர்ச்சை பேச்சு

    விருதுநகர் அரசுப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நடத்திய ஆய்வின் போது, மாணவி ஒருவரை ஆங்கிலத்தில் பேசச் சொன்னதும், அந்த மாணவி திணறியதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. முன் பெஞ்ச் மாணவர்களுக்கே இந்த நிலை என்றால், லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களின் கதி என்ன? என்று அமைச்சர் பேசியது பெரும் கண்டனங்களை அள்ளியது.

    Advertisement

    சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களும் தொழில் துறை சார்ந்தோரும் தமிழகத்தின் தற்போதைய தொழில் சூழல் குறித்து வேறு ஒரு முக்கியமான கவலையை முன்வைக்கின்றனர்.

    அண்டை மாநிலங்களின் வேகம் - பின்தங்குகிறதா தமிழ்நாடு

    அமைச்சர் கீர்த்தனா இன்னும் தனது துறை சார்ந்த பணிகளில் முழு வேகத்தைக் காட்டாத இந்த ஆரம்ப நாட்களிலேயே, அண்டை மாநிலங்களான தெலுங்கானாவும் ஆந்திராவும் மிகப்பெரிய முதலீடுகளை அள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கியுள்ளன. சரியாக சொல்லப்போனால் கீர்த்தனா மாணவிக்கு அட்வைஸ் செய்யும் கேப்பில்.. முதலீடுகளை ஆந்திராவும், தெலுங்கானாவும் அள்ளிச்செல்ல தொடங்கி உள்ளது.

    Advertisement

    ஹைதராபாத் அள்ளும் GCC முதலீடுகள்

    உலகளாவிய நிறுவனங்களின் பிராந்தியச் செயல்பாட்டு மையங்களான GCC முதலீடுகள் அனைத்தும் தற்போது ஹைதராபாத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன. அதற்கு மிக முக்கிய உதாரணமாக, உலகின் மிகப்பெரிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான நெஸ்ல, தனது மிகப்பெரிய உலகளாவிய GCC மையத்தை ஹைதராபாத்தில் அமைக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பிரபல தொழில்நுட்பச் சேவை நிறுவனமான ஜென்பேக்ட் உடன் இணைந்து இந்த மையம் அமையவுள்ளது. இங்கு பெரும்பாலும் செயல்பாட்டு சார்ந்த (முக்கியப் பொறுப்புகள் வரவுள்ளன. ஹைதராபாத்தின் கோகாபேட் - ஃபைனான்சியல் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் இதற்கான பிரம்மாண்ட அலுவலக இட ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    ஆந்திராவின் உற்பத்தித் துறை பாய்ச்சல்

    மற்றொரு புறம், உற்பத்தித் துறை சார்ந்த மெகா ப்ராஜெக்டுகள் அனைத்தையும் ஆந்திர மாநிலம் மிக வேகமாக ஈர்த்து வருகிறது.

    முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டிய தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர், தனது துறையின் முக்கியப் பணிகளில் முழு மூச்சாக இறங்குவதை விட்டுவிட்டு, பள்ளிக் கல்வித்துறை போன்ற பிற விவகாரங்களிலும் தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    புது அரசு பதவியேற்று இன்னும் சில மாதங்களே ஆகியிருக்கும் இந்த ஆரம்பக் கட்டத்தில், அண்டை மாநிலங்களின் இந்த அசுர வேக முதலீட்டு வேட்டைக்கு இணையாகத் கீர்த்தனா வியூகங்களை வகுக்கவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழக்க நேரிடும் என்று நெட்டிசன்களும் தொழில் துறை நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

    English Summary

    Is Industries Minister Keerthana wasting her time on reels and videos instead of investments?