ஸ்டாலின், உதயநிதியை தவிர்க்கிறாரா செந்தில் பாலாஜி? திமுகவுக்கு Not reachable ஏரியாவில் VSB?

  • சென்னை: குதிரை பேர வழக்கில் திமுக தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதால் சென்னையில் இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை செந்தில் பாலாஜி சந்திப்பதே இல்லை என்ற ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்பதை கண்டறியலாம்.

    Advertisement

    அதிமுகவில் பயணித்து வந்த செந்தில் பாலாஜி, சசிகலா குடும்பத்தினருடன் ஏற்பட்ட பழக்கத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார். அவரது ஆட்சியில் மிகப் பெரிய துறையான போக்குவரத்து துறை அவருக்கு வழங்கப்பட்டது.

    Advertisement

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, செந்தில் பாலாஜி பணமோசடி செய்ததாக அவர் மீது அமலாக்கத் துறையில் வழக்கு உள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது செந்தில் பாலாஜி மீது புகார் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி திடீரென திமுகவில் இணைந்த நிலையில் அந்த வழக்கு திமுக கண்டு கொள்ளவே இல்லை. இதை அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்திருந்தன. திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி,

    திமுகவில் இணைந்த பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த போது செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கும் செந்தில் பாலாஜியை துரத்தி ஓராண்டுக்கு மேல் அவர் சிறையில் இருக்க வைத்தது.

    Advertisement

    இதையடுத்து அவரது இலாகா பறிக்கப்பட்டு அமைச்சர் பதவி இல்லாமல் இருந்து வந்தார். ஜாமீன் கிடைத்து வெளியே வந்த அடுத்த நாளே அவர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். அந்த அளவுக்கு திமுகவுக்கு நெருக்கமானவர்.

    தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பதை போல் டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு, தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேர வழக்கு என அடுத்தடுத்து செந்தில் பாலாஜியின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

    இந்த நிலையில்தான் திமுகவுக்கும் செந்தில் பாலாஜிக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் சென்னையில் இருந்தாலும் மு.க.ஸ்டாலினையோ, உதயநிதியையோ சந்திப்பதே இல்லை என்கிறார்கள். மேலும் சட்டசபையில் கூட அவர் சீனியர்களுடன் பேசுவதில்லை என்கிறார்கள்.

    Advertisement

    இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், இதுவரை திமுக வரலாற்றில் எந்த சீனியர்களுக்கும் செந்தில் பாலாஜிக்கு இருப்பது போல் ஏகப்பட்ட வழக்குகள் இல்லை.

    எனினும் செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே அவரை திமுக தலைமை கண்டுக் கொள்ளவில்லை என சொல்வதை ஏற்க முடியாது.

    மேலும் கரூர், கோவை, மேற்கு மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியை பலப்படுத்தியதில் செந்தில் பாலாஜியின் பங்கு அதிகம். திமுக தலைமை அவரை கண்டுக் கொள்ளாமல் விட்டால் வரும் தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் மீண்டும் திமுக கொடியை நாட்ட முடியாது என்பது திமுக தலைமைக்கு நன்கு தெரியும்.

    Advertisement

    பொதுவாக வழக்குகள் என வந்துவிட்டால் அதை அவரவர் சந்தித்துக் கொள்ள வேண்டும். இதில் கட்சி தலையிடாது, கண்டன அறிக்கைகளை விடும், திறமையான வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வைக்கும். போராட்டங்களை முன்னெடுக்கும், ஆனால் வழக்கு குறித்து சட்டரீதியாக திமுக தலைமை தள்ளி நிற்கிறது என்று சொல்வது தவறு.

    மேலும் செந்தில் பாலாஜியும் திமுக தலைமையை தவிர்க்க வாய்ப்பே இல்லை. தற்போதைய சூழலில் திமுகவில் செந்தில் பாலாஜிக்கு அதி முக்கியத்துவம் உள்ளது. அவரது பரிந்துரையின் பேரில்தான் கோவை வைஷ்ணவிக்கு பதவி வழங்க போகிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் யாராவது கட்சி தலைமையுடன் முறைத்துக் கொள்வார்களா?

    Advertisement

    எம்எல்ஏவாக இருக்கும் செந்தில் பாலாஜி, கட்சிக்கு எதிராக செயல்பட்டால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அப்படியிருக்கும் சூழலில் தனது வழக்குகளுக்காக செந்தில் பாலாஜி பாஜகவுடன் நெருக்கம்காட்டுகிறார் என சொல்வது முரணானது. இதுவரை செந்தில் பாலாஜி சந்தித்த அனைத்து உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழக்குகளிலும் திமுகவின் முன்னணி வழக்கறிஞர்கள்தான் ஆஜராகி வழக்கை நடத்தியுள்ளனர். இப்படி சட்டரீதியாக திமுகவில் கிடைக்கும் உதவியை விட்டுவிட்டு செந்தில் பாலாஜி தனித்து செயல்பட்டால் அவர் மேலும் சிக்கலை சந்திப்பார் என திமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

    English Summary

    Is Senthil Balaji away from Stalin and Udhayanidhi? What is the reality?