சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 4 மாதங்கள் ஆகியிருக்கின்றன. ஆனால், மாணவர்கள் விஷயத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அசால்ட்டாக நடந்துக்கொள்வதாகவும், இப்படியே இருந்தால்.. 1967ல் காங்கிரஸுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும் என்று அரசியல் விமர்சர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் ஆட்சி அதிகாரத்திற்கு வர மாணவர்களும், இளைஞர்களும்தான் முக்கிய காரணம். இருப்பினும் மாணவர்கள் விஷயத்தில் தவெக அரசு காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இந்த பிரச்சனையை நீட் போராட்டத்திலிருந்தே பேச வேண்டும். மொத்த நாடும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வே வேண்டாம் என்று மாணவர்கள் வீதிக்கு வந்தனர். விஜய் அரசு, நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைதான் கொண்டிருக்கிறது. அப்படியெனில்.. இந்த போராட்டத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடி தேடி கைது செய்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவரை (SFI), கல்வி நிலைய வளாகத்திற்குள் நுழைந்து போலீசார் கைது செய்ய முயன்றனர். அந்த மாணவர் அப்படி என்ன தேச விரோத செயலை செய்துவிட்டார்? என்பது விஜய்க்குதான் வெளிச்சம். மறுபுறம் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க தொடங்கினர். குறிப்பாக, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த இடதுசாரி கட்சிகள், மாணவர் போராட்டத்தை ஒடுக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று வார்னிங் கொடுத்தன. இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் போராட்டங்களுக்கு அனுமதி தருவதாக தெரிவித்தார். இருந்தாலும் பஞ்சாயத்து அத்துடன் முடிந்துவிடவில்லை. மலேசியா மாணவரின் கல்வி உதவித்தொகை தற்போது தவெகவுக்கு எதிரான முக்கியமான பிரச்சனையாக வெடித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் தமிழக மாணவர் பாரதிதாசன், மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார். இவருக்கு இன்னும் ஒரு பகுதி கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படவில்லை. இந்த உதவித்தொகை இல்லாததால் என்னால் படிப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை என்றும், விரைவில் பல்கலைக்கழகத்திலிருந்து தன்னை வெளியேற்றிவிடுவார்கள் என்றும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருக்கிறார். ஆராய்ச்சிக்கான பொருட்கள் வாங்கியதற்கும் விளக்கம் கேட்டு, தமிழக அரசு தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அதிருப்தி தெரிவித்திருக்கிறார். அன்று ரோஹித் வெமுலா, இன்று நானா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், தமிழக அரசோ.. மாணவரின் செலவுகள் குறித்து பல்கலைக்கழகத்தின் அப்ரூவலை கேட்டிருப்பதாக கூறியிருக்கிறது. இந்த விளக்கம் எல்லாம் தேவையில்லை.. தமிழக அரசு மாணவர்கள் விஷயத்தில் விளையாட கூடாது. நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாணவர் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. சரி இத்துடன் தவெக அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைத்தால்.. அதுதான் கிடையாது. இதை தொடர்ந்து மற்றொரு மாணவர் விஷயத்திலும், தவெக அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. மதுரையில் 11ம் வகுப்பு படித்து வந்த தமிழ்ச்செல்வன் என்கிற பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கிரிக்கெட் விளையாட சென்ற சிறுவனை போதை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கி, முட்புதர் நிறைந்த கிணற்றில் தள்ளியுள்ளது. ஆனால், போலீசார் மர்ம மரணம் என்று மட்டுமே வழக்குப்பதிவு செய்திருந்தனர். சிறுவன், தன்னுடன் படிக்கும் சிறுமியிடம் நட்பாக பேசி வந்ததாகவும், அதை விரும்பாத சிறுமியின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் சிறுவனை அழைத்து கண்டித்ததாகவும் சிறுவனின் பெற்றோர்கள் கூறியிருக்கின்றனர். இப்படி இருக்கையில் பிரேத பரிசோதனையில் சிறுவனின் நெஞ்சு பகுதியில் காயம் மற்றும் கால்களில் சிராய்ப்புகள் இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை எப்படி வெறும் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்யலாம்? இது ஆணவக்கொலைதான் என்று உறவினர்களும், மாணவர் அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன. மரணத்திற்கு நீதி கேட்டு போராடி பெண்களையும், சக மாணவர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக கைது செய்து தூக்கி சென்றனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இன்று மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள், சக மாணவர்கள், மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இப்படியாக தொடர் மாணவர் போராட்டங்கள்.. தவெக அரசின் மீதான மதிப்பை குறைத்துக்கொண்டே வருகிறது என்று எச்சரிக்கும் நிபுணர்கள், கடந்த 1967ம் ஆண்டு அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியும், இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தில்தான் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு காங்கிரஸ் வர 60 ஆண்டுகள் ஆனது. அதே நிலையில் தவெக சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர் போராட்டங்களை கவனமாக கையாள வேண்டும் என்றும்.. மாணவர்களின் கோரிக்கைகளை முடிந்தவரை சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.பிரச்சனையின் தொடக்கம்
விளைவுகள் மோசமாக இருக்கும்
இரண்டாவது பஞ்சாயத்து
அடுத்த ரோஹித் வெமுலா
மூன்றாவது பிரச்சனை
ஆணவக்கொலை?
விஜய்க்கு நெருக்கடி