பாலன் இல்லத்தில் பாய்ந்த விஜய் எதிர்ப்பு முழக்கங்கள்.. கம்யூனிஸ்ட்டுகள் மீது கடுப்பில் விஜய்!

  • சென்னை: சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான 'பாலன் இல்லம்' கடந்த சில நாட்களாகவே பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. நீட் தேர்வுக்கு எதிராகத் திரண்ட மாணவர் அமைப்புகள், இளைஞர் இயக்கங்கள் மற்றும் அரசியல் தரப்புகள் இணைந்து நடத்திய தொடர் போராட்டம் தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஆனால், இந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தைக் காட்டிலும், அங்கு நடந்த அரசியல் நகர்வுகளும் முழக்கங்களும்தான் தவெக தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

    Advertisement

    குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது கோபத்திலும் அதிருப்தியிலும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாலன் இல்லத்தில் கூடிய 'ஜென் ஜி' திமுக!

    சென்னையில் நீட் விலக்கு கோரி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுகவின் ஜென் ஜி அமைப்பினர் பெருமளவில் திரண்டனர். அதேபோல, சிஜேபி மற்றும் இடதுசாரி அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர். ஆனால், இந்த முழுப் போராட்டத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்களோ நிர்வாகிகளோ பெரிய அளவில் பங்கேற்கவில்லை.

    போராட்டம் வலுவடைய வலுவடைய, நீட் விலக்கு கோரிக்கையையும் தாண்டி, தவெக தலைவர் விஜய்யைக் குறிவைத்து முழக்கங்கள் எழத் தொடங்கின. "எங்கே விஜய்?", "மாணவர் பிரச்சனை நடக்கும்போது விஜய் என்ன செய்கிறார்?", "ஜனநாயகன் பட கொண்டாட்டம்தான் முக்கியமா?" என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் போராட்டக் களத்தில் எழுப்பப்பட்டன.

    Advertisement

    மேடையிலேயே அவமானப்பட்ட அமைச்சர் ராஜ்மோகன்!

    போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும், மாணவர்களிடம் பேசவும் வந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கும் அங்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அவருக்கு எதிராகவும் தவெக அரசுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் குரல் உயர்த்தினர்.

    மெரினா மெரினா மெரினா.. பாஜக சொல்லுங்க பாஜக சொல்லுங்க.. ஒருமுறை பாஜக பெயரை சொல்லுங்க.. என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, அமைச்சர் ராஜ்மோகன் தனது உரையைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு, கடும் அதிருப்தியுடன் பாலன் இல்லத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஒரு அரசியல் கட்சித் தலைமையகத்திற்குள் வைத்து அமைச்சருக்கே இந்த நிலைமை ஏற்பட்டது தவெக மூத்த தலைவர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    Advertisement

    கம்யூனிஸ்ட்டுகள் செய்த ட்விஸ்ட்

    தவெக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை இருக்கும் நிலையில்.. ஆட்சிக்கு ஆதரவு தரும் நிலையில்.. தங்களின் சொந்தக் கட்சித் தலைமையகமான பாலன் இல்லத்தை, திமுகவினரும் மற்ற அமைப்பினரும் விஜய்க்கு எதிராகப் பேசுவதற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனுமதித்தது தவெக தரப்பை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

    அதுமட்டுமன்றி, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியின் சில முக்கியப் பொறுப்பாளர்களும்கூட இந்த மேடையில் விஜய்யின் மௌனத்தைக் விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. "கூட்டணியில் இருந்து கொண்டே, பழைய தோழமையான திமுகவுக்கு இடமளித்து, எங்கள் தலைவரைத் தாக்கிப் பேச அனுமதிப்பது என்ன மாதிரியான அரசியல் அறம்?" என்று தவெக வட்டாரங்கள் கொந்தளிக்கின்றன.

    Advertisement

    விஜய் அப்செட்

    நீட் தேர்வு விவகாரத்தில் தவெக ஏற்கனவே தெளிவான அறிக்கையை வெளியிட்டு, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. நிலைமை இப்படி இருக்க, களத்தில் தங்களை வேண்டுமென்றே 'ஆப்சென்ட்' ஆக்கி, அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்த கம்யூனிஸ்ட்டுகளும் திமுகவும் இணைந்து திட்டமிட்டுச் செயல்பட்டதாக விஜய் கருதுவதாகக் கூறப்படுகிறது.

    தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய விஜய், "நமக்கு எதிரான பிரச்சார மேடையாக ஒரு தோழமைக் கட்சியின் அலுவலகமே மாறியிருப்பதை ஏற்க முடியாது" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.

    Topics: #cpi #cpm #vijay #tvk

    English Summary

    Is the TVK-Left Coalition breaking? Why TVK Chief Vijay is Upset with CPI and CPM?