இன்று கொண்டாடப்படுவது 79 வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா.. எது சரி? இதோ விளக்கம்

  • சென்னை: இந்தியாவின் சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை 79-வது சுதந்திர தினம் என்றும் 80-வது சுதந்திர தினம் எனவும் பலரும் பதிவிடுவதை பார்க்க முடிகிறது. உண்மையில் இது எத்தனையாவது சுதந்திர தினம் என்ற குழப்பம் ஏற்படலாம். உண்மையில் எது சரி? என்பது பற்றியும் அதற்கான காரணம் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    நாடு முழுவதும் இன்று இந்தியாவின் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திரதினநாள் என்றாலே, பள்ளிகளில் கொடியேற்றிவிட்டு மிட்டாய்கள், சாக்கலேட்கள் கொடுப்பார்கள் என்பதே சிறு வயதில் முதலில் நினைவுக்கு வரும்.

    Advertisement


    80-வது சுதந்திர தினமா?

    ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நமது தேசம், சுதந்திர போராட்ட வீரர்களின் பெரும் தியாகத்தால் சுதந்திர காற்றை சுவாசித்த நாளே சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் சுதந்திர தினம் 79 வது சுதந்திர தினமா அல்லது 80-வது சுதந்திர தினமா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஏனெனில், சிலர் 79வது சுதந்திர தினம் என்றும் சிலர் 80 என்றும் சொல்கிறார்கள். உண்மையில் எது சரியானது என்று தெரிந்து கொள்ளலாம்.

    இந்தியா ஆகஸ்ட் 15 2026 ஆம் ஆண்டு தனது 79 வது சுதந்திர தினத்தை நிறைவு செய்கிறது. 80 வது சுதந்திர தினத்தின் தொடக்கத்தை கொண்டாடுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் இரண்டுமே சரியானதுதான். இன்னும் எளிதாக சொல்வது என்றால் இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தனது முதல் சுதந்திர தினத்தை கொண்டாடியது.

    Advertisement

    முதல் சுதந்திர தினம் எப்போது?

    முதல் சுதந்திர தினம் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திரம் பெற்ற நாளில் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தின் நினைவாக 1948 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தின் ஓராண்டு நிறைவு மற்றும் 2 வது சுதந்திர தினம் 1948 ல் கொண்டாடப்பட்டது. 2026 ஆகஸ்ட் 15ல் இந்தியா 79 வது சுதந்திர தினத்தை நிறைவு செய்கிறது. 80 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

    மொத்த ஆண்டை கணக்கிட்டால் அதாவது 1947 - 2026 கழித்தால் 79 ஆண்டுகள் வரும். இருந்தாலும், ஆகஸ்ட் 15, 1947 முதல் முதல் சுதந்திர தினம் ஆகும். 2026ல் டெல்லி செங்கோட்டையில் 80 வது ஆண்டாக இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்க இருக்கிறது.

    Advertisement

    சுதந்திர தினத்தின் கருப்பொருள்

    2026-ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம், "விக்சித் பாரத் @2047-க்கான யுவ சக்தி" என்ற கருப்பொருளை மையமாக கொண்டுள்ளது. அதோடு வந்தே மாதரம்" பாடலின் 150-வது ஆண்டையும் நினைவுகூருகிறது. சுதந்திர நாளில் டெல்லியில் பிரதமரும் மாநிலங்களில் முதல்வர்களும் கொடியேற்றுவார்கள். மாநிலங்களில் கொடியேற்றும் உரிமையை பெற்று கொடுத்தது கலைஞர்தான்.

    1974 ஆம் ஆண்டு வரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களிலும் மாநிலத்தில் ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி வந்தனர். இதனை மாற்ற கலைஞர்தான் குரல் கொடுத்தார். இதன்படி 1974 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமை கிடைத்தது.

    English Summary

    Is this 79th Independence Day or the 80th?: Many people are posting about the Independence Day being celebrated today, referring to it variously as the 79th or the 80th Independence Day. This can lead to confusion regarding which anniversary it actually is. Here, we examine the facts and the reasons behind this.