ஈசிஆர் சரவணன் தானா இது.. என்ன ஒரு ஆச்சரியமான மாற்றம்.. தவெக தலைமை அலுவலகத்தை பாருங்க

  • சென்னை: சென்னையில் தவெக ஆட்சியில் போஸ்டர்கள், பேனர்கள் என்றாலே சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ. ஈ.சி.ஆர். சரவணன் பெயர்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள் ஒட்டுவது, பேனர்கள் வைப்பது என மக்களுக்கு இடையூறு கொடுப்பதாகப் புகார்கள் அதிகரித்தன. அண்மையில் தவெகவினரே ஈ.சி.ஆர். சரவணனுக்கு எதிராகக் கொந்தளிக்கத் தொடங்கினர். இறுதியாக, இனிமேல் நான் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்க மாட்டேன்; ஆதரவாளர்களும் வைக்க வேண்டாம் என்று ஈ.சி.ஆர். சரவணன் வீடியோ வெளியிடும் அளவுக்கு நிலைமை சென்றது. அவரும் வருத்தம் தெரிவித்தார். இந்தச் சூழலில், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திலும் போஸ்டர்கள், பேனர்கள் என எதுவுமே இல்லை. நோட்டீஸ் ஒட்டாதீர்கள் என்று பேனரே வைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரியமான மாற்றம்.

    Advertisement

    சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ. ஈ.சி.ஆர். சரவணன், விஜய்யுடன் ரசிகர் மன்றத்தில் இருந்த காலத்திலிருந்தே பயணித்து வந்தவர். மற்ற கட்சி நிர்வாகிகளைவிட இவர் விளம்பரங்களை அதிகம் விரும்புவார். ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகளில் எங்கு திரும்பினாலும் ஈ.சி.ஆர். சரவணனின் பேனர்கள்தான் கண்ணில் படும். ஒருகட்டம் வரை இதை ரசித்த தவெகவினர், கட்சி ஆளுங்கட்சியான பின்னர் விமர்சனங்கள் எழுந்ததால் சற்றே எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

    Advertisement

    ஏனெனில், பனையூர் மற்றும் நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் வரைக்கும் முதல்வரின் கண்ணில் படும்படியாக அவரை வாழ்த்திப் போஸ்டர்களையும் பேனர்களையும் வைத்து வந்தார். 'மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக்கூடாது' எனத் தலைமை உத்தரவிட்ட பிறகும் சரவணன் தொடர்ந்து செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

    ஒருகட்டத்தில் போஸ்டர்கள், பேனர்கள் எல்லை மீறியதால், தவெகவினரே கொந்தளிக்கத் தொடங்கினர். அண்மையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தவெக வென்றது. அந்த வெற்றிக் கொண்டாட்டம் தொடர்பாக ஈ.சி.ஆர். சரவணன் வைத்த பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் கொண்டாட்ட வீடியோக்கள் அவருக்கு எதிராகத் திரும்பின. சமூக வலைதளங்களில் தவெகவினர் ஈ.சி.ஆர். சரவணனை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். தவெகவின் வெற்றிக் கொண்டாட்டம் எந்த அளவுக்கு வைரலானதோ, அதே அளவுக்கு ஈ.சி.ஆர். சரவணனும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

    Advertisement
    தவெக ஆட்சியில்.. பெரும் வீழ்ச்சி.. இந்திய அளவில் 2-வது இடத்தை இழக்கும் தமிழ்நாடு? போச்சு!

    இதையடுத்து, இனிமேல் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க மாட்டேன்; என் பெயரில் யாரும் இனி போஸ்டர்கள், பேனர்கள் வைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்து ஈ.சி.ஆர். சரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. ஈ.சி.ஆர். சரவணனின் தொகுதியில் உள்ள பனையூரில்தான் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு முன்பெல்லாம் ஈ.சி.ஆர். சரவணனின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களும் வைத்த பேனர்களும்தான் அதிகமாக இருந்தன.

    ஆனால், இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பேனர்களும் இல்லை; போஸ்டர்களும் இல்லை. 'நோட்டீஸ் ஒட்டாதீர்கள்' என்று சுவரில் எழுதப்பட்டிருந்தது. அதன் முன்பு ஈ.சி.ஆர். சரவணன் நின்று வீடியோவும் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த தவெகவினர், 'சபாஷ் சார்! நல்ல மாற்றம். இதையே மெயின்டெயின் பண்ணுங்க' என்று அவரைப் பாராட்டியுள்ளனர். அவருக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

    English Summary

    After so much of backlash, we are seeing changes at TVK Party HQ. Now how long before we do this across Tamil Nadu?? Bring a blanket ban on posters & banners