விஜய் அரசின் உத்தரவு சர்ச்சைகள்! கம்யூனிஸ்ட், கரப்பான் பூச்சி கட்சிகளை காலி செய்யும் தவெக?

  • சென்னை: தமிழ்நாட்டில் காக்ரோச் ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக விஜய்யின் தவெக அரசு திரும்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் அரசின் தொடர் நடவடிக்கைகள் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.

    Advertisement

    விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, போன்ற கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.

    Advertisement

    இத்தகைய அரசியல் சூழலில், சமீப காலமாக இடதுசாரி கட்சிகள் மற்றும் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் காக்ரோச் ஜனதா கட்சி ஆகியவற்றை நோக்கி விஜய் அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

    1. கல்லூரி கல்வி இயக்ககத்தின் அவசர சுற்றறிக்கை

    இன்று கல்லூரி கல்வி இயக்ககம் பிறப்பித்துள்ள அவசர உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டது. கடைசியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது.

    Advertisement

    பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனே அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு "மிக அவசரம்" என்ற குறிப்புடன் உத்தரவிடப்பட்டது. அதாவது மாணவர்கள் இந்த அமைப்புகளின் போராட்டங்களில் கலந்து கொள்ளவே கூடாது அப்படி கலந்து கொண்டால்.. அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விஜய் அரசின் உத்தரவு. கடைசியில்.. தற்போது அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அரசு இந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது.

    Advertisement

    2. நீட் எதிர்ப்புப் போராட்டமும் CJP மாணவர்கள் மீதான கைது நடவடிக்கையும்

    இதற்கு முன்பாக, சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தின் போது அரசு நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு தீவிர கவனத்தைப் பெற்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசியல் ஒருமித்த கருத்து நிலவினாலும், சாலை மறியல் மற்றும் திடீர் போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவு மாணவர்களை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தது. நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருவது போல தந்துவிட்டு இன்னொரு பக்கம் கைது நடவடிக்கையையும் விஜய் அரசு செய்தது.

    Advertisement

    கல்வி நிறுவன வளாக அமைதியை நிலைநாட்டவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் தடுக்கவும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டாலும், களத்தில் தீவிரமாகப் போராடும் அமைப்புகள் மீது அரசு காட்டும் கண்டிப்பு அரசியல் தளத்தில் பேசுபொருளானது. முக்கியமாக மாணவர்களே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    3. திண்டுக்கல் குஜிலியம்பாறை வட்டாட்சியர் உத்தரவும் எழுந்த கொந்தளிப்பும்

    இந்த நிகழ்வுகளுக்கு நடுவே, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி நேற்று பிறப்பித்த வினோதமான உத்தரவு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜிலியம்பாறை வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினரின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விவரங்களையும் சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கிராம உதவியாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பினார்.

    Advertisement

    ஆளுங்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களைக் குற்றப் பின்னணி கொண்டவர்களைப் போல விவரம் சேகரிக்க உத்தரவிட்டது மார்க்சிஸ்ட் கட்சியினர், நெட்டிசன்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய வட்டாட்சியர் மீது மாவட்ட நிர்வாகம் தரப்பில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது.

    அரசியல் தளத்தில் எழும் கேள்விகள்

    நீட் போராட்டத்தின் போது CJP ஆதரவு மாணவர்கள் கைது செய்யப்பட்டது, திண்டுக்கல் வட்டாட்சியரின் அத்துமீறிய சுற்றறிக்கை சர்ச்சை, தற்போது கல்லூரி மாணவர்களை இடதுசாரிகள் மற்றும் CJP போராட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்கும் அரசின் கூட்டு நடவடிக்கை என அடுத்தடுத்து நிகழும் இந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் தற்செயலானவையா அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.

    ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும், களத்தில் இளைஞர்களிடையே தீவிரமாக இயங்கும் CJP போன்ற அமைப்புகளையும் தவெக அரசு கட்டுப்படுத்த முனைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்க்கு அப்படி CJP மீதும்.. கம்யூனிஸ்டுகள் மீதும் என்னதான் கோபமோ.. தெரியலையே!

    English Summary

    Is TVK Govt cracking Down on CJP and Left Parties? Inside Vijay plan