Isakki Subbaiah: 5 வருடங்களாக நான்பட்ட கஷ்டம்.. ராஜினாமா குறித்து உடைத்த இசக்கி சுப்பையா

  • சென்னை: அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவி ராஜினாமா குறித்து இசக்கிமுத்து விளக்கமளித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை.

    Advertisement

    இதனால் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி அணியிலும், தவெகவிலும் இணைந்து வருகிறார்கள். அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை செயலகத்தில் வைத்தே அவர்கள் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

    இதுகுறித்து இசக்கி சுப்பையா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனது தொகுதி மக்கள் தான். அதைக் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராஜினாமா குறித்து உரிய விளக்கமளிப்பேன். என் ராஜினாமாவை ஏற்க முடிக்க என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்வது அவர்களின் கருத்து.

    Advertisement

    என்னுடைய ராஜினாமா குறித்து சபாநாயகர் உரிய முடிவு எடுப்பார். கடந்த 5 வருடங்களாக தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை பற்றி எனக்கு தான் தெரியும். தொகுதி மக்களுக்கு பணியாற்ற முடியவில்லை என்பதால் சில முடிவுகளை எடுத்தேன். முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்கிறார்.

    வாய்ப்பிருந்தால் முதலமைச்சரை சந்திப்பேன். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் நான் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேனா என்பது பற்றி தெரியாது. எதிர்க்கட்சிகள் புகார் சொல்வது அவர்களின் கருத்துரிமை. சபாநாயகர் சட்டப்படி எது சரியோ அந்த நடவடிக்கை மேற்கொள்வார்" என்றார்.

    English Summary

    Isakki Subbaiah: Ambasamuthiram former ADMK MLA said, I took this decision to benefit my constituency people. I was pain with past 5 years.