ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை! ஏஐ வந்து அதுவும் போச்சு.. 4 மடங்கு சர்வர் விலை: ஸ்ரீதர் வேம்பு

  • சென்னை: ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு ஐடி நிறுவனங்களில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன? புதிய வேலைக்குச் செல்ல காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைகிறதா? ஏற்கெனவே வேலை பார்ப்பவர்களுக்கும் சிக்கல் வருமா? இப்படி ஐடி துறையைச் சுற்றி நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள புதிய பதிவு கவனம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்றும், பெரிய அளவில் ஆட்களை வேலையை விட்டு நீக்காமல் இருக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

    Advertisement

    சோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து அடிக்கடி தனது கருத்துகளை அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில்கூட இந்திய ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வேகம் குறைந்துள்ளதாகக் கூறியிருந்தார்..

    Advertisement

    ஏஐ தொழில்நுட்பத்துக்காக நிறுவனங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதேபோல, சர்வர், மெமரி உள்ளிட்ட கணினிப் பாகங்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகவும், ஏஐ உதவியுடன் சாப்ட்வேர்கள் வேகமாக உருவாக்க முடிந்தாலும், மார்க்கெட்டில் ஏற்கெனவே நிறைய சாப்ட்வேர் இருப்பதால் புதிதாக இன்னும் எவ்வளவு மென்பொருட்கள் தேவைப்படும் என்றும் கேள்வியையும் எழுப்பியிருந்தார்..

    ஏஐ வளர்ச்சி + ஐடி கம்பெனிகள்

    இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். "ஐடி துறை சார்ந்த வணிக சூழல் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. அதேசமயம், ஏஐ பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருவதாலும், தரவு மையங்களுக்குத் தேவையான சர்வர் விலைகள் 4 மடங்கு உயர்ந்துள்ளதாலும் செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. இந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம்..

    Advertisement

    இதனிடையே, சவாலான உலக அரசியல் சூழலும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. நாங்கள் எங்கள் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளை குறைத்துள்ளோம். இந்த வருடம் வழக்கமான ஊதிய உயர்வு இருக்காது என்பதையும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளோம். இந்த நிலையைத் தவிர்க்க இயலாததற்கு நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்..

    யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை

    பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர்க்க நாங்கள் தீவிரமாகவே முயற்சிப்போம். இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஐடி துறையில் வேலைவாய்ப்புகளுக்கான சூழல் கவலைக்குரியதாகவே உள்ளது. கடந்த 18 மாதங்களாகவே நாங்கள் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்தி வைத்துள்ளோம்..

    Advertisement

    எங்கள் ஊழியர்களில் பெரும்பாலோர் இந்த சூழலைப புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் எங்களை முழுமையாகப் புதுப்பித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த 3 முதல் 5 வருடங்கள், எங்கள் இந்த மாற்றமும் புதுப்பித்தலும் எந்தளவுக்குப் பலனளித்துள்ளது என்பதை தீர்மானிக்கும். தயவுசெய்து எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்..

    ஊழியர்களுக்கு பாதிப்பு

    ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ள இந்த கருத்து பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. காரணம், சர்வர் விலை உயர்வு என்பது நிறுவனங்களின் செலவை அதிகரிக்கும் ஒரு விஷயம் மட்டுமல்ல. ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்துவதற்கும், அதை இயக்குவதற்கு தேவையான வசதிகளை உருவாக்குவதற்கும் நிறுவனங்கள் அதிகப் பணம் செலவிட வேண்டியுள்ளது. இதனால் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது, சம்பள உயர்வு வழங்குவது போன்ற முடிவுகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம்..

    Advertisement

    ஆனால், ஐடி துறையில் எல்லா நிறுவனங்களும் இதே முடிவை எடுக்கும் என்று சொல்ல முடியாது. சோஹோ நிறுவனம் இப்போது செலவுகளைக் குறைத்து, தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த முயற்சி அடுத்த 3 முதல் 5 வருடங்களில் எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வியாக உள்ளது..!!!

    English Summary

    IT Employees Salary Hike: AI Costs Surge as Server Prices Jump 4X, Zoho Founder Sridhar Vembu Explains