இந்தியர்களின் ஐடி வேலைவாய்ப்பு பறிபோகிறது.. டாப் 6 நிறுவனங்களில் நிலைமை இதுதான்.. அதிர்ச்சி டேட்டா

  • சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் கடந்த ஓராண்டில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டோரின் எண்ணிக்கையைவிட வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஆறு டாப் நிறுவனங்களில் மொத்த பணியாளர் சேர்க்கை 24,422 குறைந்துள்ளது.

    Advertisement

    இந்தியாவில் முக்கியமான ஒயிட் காலர் வேலை என்றால் அது ஐடி தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஐடி சர்வீஸ் துறையில் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கு ஆட்களை எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த டிரெண்ட் மொத்தமாக மாறியது. அதற்கு முக்கிய காரணம் ஏஐ!

    Advertisement

    ஐடி துறை

    வழக்கமான ஐடி சர்வீஸிங்கில் பல வேலைகளை ஏஐ எளிதாக செய்ய முடிகிறது. இதற்கு செலவும் குறைவாகவே ஆவதால் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் ஐடி சர்வீஸ் நிறுவனங்களின் செட்அப் மொத்தமாக மாறி வரும் சூழலில், வேலைக்கு எடுப்போரின் எண்ணிக்கையும் சீராக குறைந்து வருகிறது.

    இந்த சூழலில் தான் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் கடந்த ஓராண்டில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டோரின் எண்ணிக்கையைவிட வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்டிஐ மைண்ட்ட்ரீ ஆகிய ஆறு நிறுவனங்களிலும் கடந்த 12 மாதங்களில் மொத்தம் 92,000 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    என்ன சிக்கல்

    அதேநேரம் இந்த நம்பர் ரொம்வே அசாதாரணமானது என சொல்லிவிட முடியாது. எப்போதுமே ஐடி துறையில் 11 முதல் 15 சதவீத பேர் வேலையை விட்டு நீக்கப்படுவது வழக்கமாகவே இருக்கும். அந்த Attrition Rateக்கு ஏற்பவே இந்த நம்பர் இருக்கிறது. ஆனால், வெளியேறும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஊழியர்களை நிறுவனங்கள் பணியமர்த்தவில்லை என்பதுதான் தற்போதைய முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    ஐடி மற்றும் இன்ஜினியரிங் பிரிவுகளில் கடந்த ஆறு மாதங்களில் ஐந்து மாதங்கள், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களைவிட வேலையை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 12 மாதங்களில் இந்த ஆறு நிறுவனங்களின் நிகர பணியாளர் சேர்க்கை 24,422 குறைந்து. அதா சுமார் 68,000 ஆக பதிவாகியுள்ளது.

    Advertisement

    காரணம் ஏஐ?

    தொழில்நுட்ப தேவைகள் மாறி வருவதும், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிப்பதும் பாரம்பரிய ஐடி வேலைவாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, வழக்கமாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகள் ஊழியர்களுக்கு பதிலாக ஏஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதுவே வேலை குறைப்புக்கு காரணமாகும்.

    அதேநேரத்தில் அனைத்து தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன என்று கூற முடியாது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை சுமார் 16 சதவீதம் வளர்ந்து வருகிறது. ஆனால் மற்ற பிரிவுகளில் ஆட்கள் தேவை சரிவதால் ஒட்டுமொத்த ஐடி வேலைவாய்ப்புகள் 3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன. இதன் மூலம் ஐடி துறையில் வேலைவாய்ப்புகளின் தன்மை மாறி வருவது தெளிவாகிறது. அதாவது குறைந்த திறன் தேவைப்படும் ஐடி வேலைகள் இல்லாமல் போய் வரும் நிலையில், அதிக திறன் கொண்ட ஐடி வேலைகள் கணிசமாக அதிகரித்து வருகிறது.

    English Summary

    India’s six leading IT companies saw their combined net headcount decline by 24,422 over the past 12 months(இந்தியாவில் சரியும் ஐடி வேலைவாய்ப்புகள்): IT Jobs Crisis in India latest news in tamil.