சென்னை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது அந்தக் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் கூறியிருந்தார். அதனடிப்படையில் முருகானந்தத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை வீழ்த்துவதற்கு 30 ஆண்டுகளாக சதி நடந்ததாக முருகானந்தம் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கருப்பு முருகானந்தம் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை வீழ்த்துவதற்கும், அழிப்பதற்கும் எத்தனையோ சூழ்ச்சிகளும் சதி வேலைகளும் அரங்கேற்றப்பட்டன. அந்த இக்கட்டான காலகட்டங்கள் அனைத்திலும் தோளோடு தோள் நின்று, உயிருக்கு உயிராக என்னோடு துணை நின்று என்னைக் காத்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தற்போது துரோகிகளால் நான் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், வீழ்ந்தாலும் உடனே பீனிக்ஸ் பறவையென எழுந்து நிற்கும் வலிமை கொண்டவன் நான். எந்தக் கொள்கைக்காக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோமோ, அதே கொள்கைக்காக வாழ்ந்து மடிவதே மேல் என்ற உறுதியோடு பயணிப்பவன் நான். எனவே, வரும் 20/09/2026 அன்று நடைபெறவிருக்கும் முத்துப்பேட்டை வெற்றி விநாயகர் ஊர்வலம் வழக்கம் போல மிகச் சிறப்பாக நடைபெற வேண்டும். எனக்கு ஊக்கத்தையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் அளிக்கும் வகையில், என் மீது அன்பு கொண்ட என் சகோதர, சகோதரிகள் அனைவரும் தவறாமல் இந்த வெற்றி விநாயகர் ஊர்வலத்தில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வருகையே எனக்குத் தரும் மிகப்பெரிய பலமும் உற்சாகமும் ஆகும். நன்றி"என்று கூறியுள்ளார். அவரின் பதிவு பாஜகவினரிடம் வேகமாக பரவி வருகிறது. முன்னததாக கருப்பு முருகானந்தம், "அது ஏஐ படம். அதை விசாரிக்காமலேயே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக தேசிய தலைவர்களிடம் பேசியுள்ளேன். போலி புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"பீனிக்ஸ் பறவையாக
ஏஐ படம்
என்று கூறியிருந்தார்.