ஐயூஎம்எல் காதர் மொகிதீன் மகன் மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்

  • சென்னை: ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் மகன் கலீலூர் ரஹ்மான் உடல்நலம் பாதிப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல அமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரஹ்மான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக இருப்பவர் காதர் மொகிதீன். இவரின் மகன் கலீலூர் ரஹ்மான் மருத்துவராக இருந்தார். சமீபகாலமாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். ஐயூஎம்எல் தமிழ்நாடு தங்களின் எக்ஸ் பக்கத்தில் அவரின் மறைவு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

    Advertisement

    காதர் மொகிதீன் மகன் மறைவு

    இதுகுறித்து முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

    தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கமிட்டி சார்பாக அமைச்சர் விஸ்வநாதன், எம்பி கிறிஸ்டோபர் திலக்
    அஞ்சலி செலுத்துவார்கள்" என கூறியுள்ளார்.

    English Summary

    IUML National President Kader Mohideen son Kaliloor Rahman died due to health issue. CM Vijay and other political leaders mourns.