உலகம் முழுக்க போயிருக்கேன்.. இந்தியா மாதிரி எங்கேயும் பார்க்கல.. விவாதத்தை கிளப்பிய சுற்றுலாப் பயணி

  • சென்னை: நான் உலகம் முழுவதும் 31 நாடுகள் சுற்றியிருக்கிறேன். ஆனால் இந்தியாவை போல எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு முரண்பாடான வாழ்க்கை செலவு முறையை பார்த்தது இல்லை என்று சுற்றுலாப் பயணி கூறியிருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. சுற்றுலாப் பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-

    Advertisement

    "நான் 31 நாடுகள் சுற்றியிருக்கிறேன். ஆனால், இந்தியாவில் இருப்பது போல ஒரு முரண்பட்ட வாழ்க்கை செலவு முறையை கண்டதில்லை. மேற்கு நாடுகளில் கூட இப்படி இருந்தது இல்லை. முக்கியமான நகரங்களில் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது. நான் வசிக்கும் குடியிருப்பில் கூட 2.15 லட்சத்திற்கு வாடகை வசூலிக்கிறார்கள்.

    Advertisement

    46 லட்சம் ரூபாய் வரி கட்டியிருக்கிறார்

    இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவில் வசிக்கக்கூடிய மக்களிடையே வருமானத்திலும் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது. வருமானமும் வரியும் அபத்தமாகவே உள்ளன. என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கடந்த ஆண்டில் மட்டும் 46 லட்ச ரூபாயை வரியாக செலுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் மாதம் ரூ.19,140 முதல் ரூ. 28,710 மட்டுமே பலரும் சம்பாதிக்கிறார்கள்.

    இதையே ஓரளவு போதுமான வாழ்க்கை என்று கருதும் இவ்வளவு அதிகமான மக்களை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. வசிப்பதற்கு விசித்திரமான நாடு இது. நான் இதுவரை பார்த்ததிலேயே மிகக் கடுமையான வருமான ஏற்றத்தாழ்வு இங்குதான் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். சுற்றுலா பயணியின் இந்த பதிவு இணையத்தளத்தில் சூடுபறக்க விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. நெட்டிசன்கள் சிலர் இதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சில நெட்டிசன்கள் அவரது கருத்தை ஏற்க மறுத்து பதிவிட்டுள்ளனர்.

    Advertisement

    அமெரிக்காவில் கூட இப்படித்தான்

    நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் சராசரி சம்பளம் மற்றும் வீட்டு வாடகையைப் பார்த்தால், சமாளிக்க முடியாத நிலையையே பார்க்க முடிகிறது. இந்தியா என்பது 'கே' வடிவ பொருளாதாரத்திற்கு சரியான உதாரணம். பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்தியாவில் மட்டும் இல்லை. இதை பல வளரும் நாடுகளில் பார்க்க முடியும். ஏன் அமெரிக்காவில் கூட இதனை பார்த்து இருக்கிறேன். நான் 50 நாடுகளுக்கும் மேல் சென்று இருக்கிறேன். மாதம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை சம்பளம் பெறும் மக்கள் கூட இதே ஓரளவு ஒகே என்று நினைப்பதும் இன்னொரு பக்கம் அதே குடியிருப்பில் கீழ் தளத்தில் வசிப்பவர்கள் 25 ஆயிரம் வாங்கும் நிலையை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய வருமான ஏற்றத்தாழ்வு இல்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    வருமானத்துக்காக 3 வேலைகள் செய்கிறார்கள்

    மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "கலிபோர்னியா அல்லது நியூயார்க்கில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் பார்த்து இருக்கலாம். நியூயார்க்கில் கோடீஸ்வரர்கள் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான வீடுகளை வாங்குகின்றனர். அதேவேளையில், சிலர் வருடத்திற்கே வெறும் 30,000 டாலர் வருமானத்தை ஈட்டுவதற்காக, 3 வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலையும் அங்கு உள்ளது' என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறாக காரசாரமாக நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

    English Summary

    A tourist's statement that they have traveled to 31 countries but have never seen such a contradictory cost-of-living pattern as in India has sparked a debate online.