ஜெகதீஷ் பழனிசாமி இங்கேயுமா? புஸ்ஸி ஆனந்தே குழம்புறாராமே.. விஜய்யிடம் நெருங்க முடியாத அமைச்சர்கள்?

  • சென்னை: முந்தைய முதலமைச்சர்களை போல் அல்லாமல், இப்போது அமைச்சர்களாலேயே முதல்வர் விஜய்யை எளிதில் நெருங்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.. ஜூனியர் அமைச்சர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட்டே கிடைப்பதில்லையாம்.. இதுகுறித்து நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதை சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!

    Advertisement

    முதல்வர் விஜய்யின் நீண்டகால மேனேஜரும், சினிமா உலகை சேர்ந்தவருமான ஜெகதீஷ் பழனிசாமி, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தவெகவின் இணைப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

    Advertisement

    ஆரம்பத்தில் தேர்தல்களில் போட்டியிடாமல் திரைமறைவிலேயே தனது "ரூட்" நிறுவனம் மூலம் சமூக வலைதள நடவடிக்கைகளைக் கவனித்து வந்த அவர், தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல்வரின் தனிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

    முதலமைச்சர் விஜய்

    பொதுவாக, அரசுப் பணியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே வழக்கமாக நியமிக்கப்படும் இத்தகைய முக்கியப் பதவியில், திரையுலகை சேர்ந்தவரும், கட்சியின் நிர்வாகியுமான ஒருவர் சீக்ரெட்டான முறையில் அமர்த்தப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் தரப்பில் அதிருப்தியும் கேள்விகளும் எழுப்பப்பட்டன.

    எனினும், விஜய்யுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புவதோடு, தனக்கென ஒரு தனி அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஜெகதீஷ் பழனிசாமி இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன... குறிப்பாக தவெகவின் இளைஞரணிப் பொறுப்பைப் பெறுவதற்காக அவரது ஆதரவாளர்கள் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் கசிந்தபடியே உள்ளன.. இதுகுறித்த தகவல்கள் முதல்வர் விஜய்யின் காதுகளுக்கும் சென்றுள்ள நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை

    Advertisement

    ஜெகதீஷ் பழனிச்சாமி

    இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. தற்போது, தவெகவின் முன் வரிசை அமைச்சர்கள் மட்டுமே அமர்ந்துள்ளனர்.. இதனால் மற்ற அமைச்சர்கள், முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டுமென்றால், நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியாத நிலையே இருந்து வருகிறது.

    அமைச்சர்கள் சந்திக்க விரும்பினால், முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அவர், எதற்காக சந்திக்கிறீர்கள்? என்கிற விபரங்களை கேட்கிறார். அவரிடம் விபரங்களை அமைச்சர்கள் சொல்ல வேண்டும். அந்த விபரங்களை அவர் ஆராய்ந்து அவர் விருப்பப்பட்டால் மட்டுமே முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு வாங்கித் தரப்படும். இல்லாவிட்டால் வெயிட்டிங் லிஸ்ட் தானாம்.

    Advertisement

    அதிருப்தியில் அமைச்சர்கள்

    அந்த வகையில், முதல்வரை சந்திக்க விரும்பிய ஜூனியர் அமைச்சர்கள் யாருக்கும் இதுவரை அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தரவில்லையாம் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி. இதனால், முதல்வரை தங்களால் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் அமைச்சர்கள் பலருக்கும் உள்ளதாம்.

    இப்படிப்பட்ட சூழலில், தவெக கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் சொல்லி, முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கலாம் என்று நினைத்து, அவரை அணுகியிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிருப்தி அமைச்சர்கள்..

    புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்

    அதற்கு புஸ்ஸி ஆனந்த், "உங்களைப் போலத்தான் நானும் இருக்கிறேன்.. இருந்தாலும் முதல்வர் தளபதிக்கு ஏதாவது ஒரு வழியில் தகவல் தருகிறேன். அவர் விரும்பும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வரும். அதுவரை காத்திருக்க வேண்டியது தான்" என்று பதில் சொல்லுகிறாராம் புஸ்சி ஆனந்த்! இதனால் முதல்வர் விஜய்யை சந்திக்க முடியாமல் அமைச்சர்கள் பலர் பரிதவித்து வருகிறார்களாம்.

    Advertisement

    மக்களால் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக மு.க. ஸ்டாலின் திகழ்ந்ததாக அன்று கூறப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர்களாலேயே முதல்வர் விஜய்யை எளிதில் நெருங்க முடியவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது...!!

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Jagadeesh Palanisamy Controls Vijay’s Appointments.. Why Are TVK Ministers Struggling to Meet CM Vijay?