”ஐ எம் கம்மிங்” ஜனநாயகன் ரிலீஸ்.. வந்தது அப்டேட்! சென்சார் கிடைத்ததும் கேவிஎன் நிறுவனம் போட்ட ட்வீட்

  • சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கேவிஎன் நிறுவனத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். "ஐ எம் கம்மிங்" என்ற டயலாக்கையும் பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

    Advertisement

    ஜனநாயகன் திரைப்படம்

    நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் தினத்தன்று திரைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படததால் திட்டமிட்டப்படி படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது. இதனால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என நினைத்து கொண்டாட தயாராக இருந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

    Advertisement

    ஜனநாயகன் பட சென்சார் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய படக்குழுவுக்கும் பின்னடைவே ஏற்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் வாங்கிய படக்குழு, மீண்டும் தணிக்கை குழுவிற்கே படத்தை அனுப்பியது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் சென்சார் பற்றிய அப்டேட்டே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு 8 மாதங்களுக்கு பிறகு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஐ எம் கம்மிங்

    சென்சார் சான்று கிடைத்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வரும் 24 ஆம் தேதி படம் வெளியாகும் என பலரும் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தனர். தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்ட பிறகும் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று கேவிஎன் புரொடெக்‌ஷன்ஸ் ஜனநாயகன் ரிலீஸ் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி விரைவில் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் தியேட்டரில் சந்திப்போம் நண்பா, நண்பீஸ் என்று போஸ்டினையும், ஐ எம் கம்மிங் என்ற போஸ்டினையும் பதிவிட்டுள்ளது.

    Advertisement

    அதே நேரம் என்ன தேதி என்பதை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. படம் வெளியாகும் தேதியினை கேவிஎன் நிறுவனம் உறுதியாக அறிவிக்கவில்லை என்றாலும், வெளிநாட்டு விநியோகஸ்தர்களிம் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவை சேர்ந்த விநியோக நிறுவனமான யார்க்ஸ் சினிமாஸ் எக்ஸ் தளத்தில் ஜனநாயகன் படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறது. இதனால் இந்த தேதி கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது.

    English Summary

    Jana nayagan has confirmed that the film will be released in theatres soon. The announcement comes after the Central Board of Film Certification granted the movie an 'A' certificate.