படம் எடுக்கும் பாம்பின் நிழலில் தவளை.. தூங்கும் தவெக அரசு! மக்கள் தான் பாவம்.. விளாசிய ஜெயக்குமார்!


  • சென்னை: தூங்கி கொண்டுள்ள தவெக அரசு எப்போது தூக்கத்தில் இருந்து விழித்து கொள்ளும் என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது எனவும், தவெகவில் இருப்பவர்கள் போதை பொருட்களை வைத்து இருந்தால் அவர்களை காவலர்கள் விடுவித்து விடுவார்கள்.. ஆனால் நாகர்கோயிலில் ஒருவரை அடித்தே கொன்று உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சிதுள்ளார்.

    Advertisement

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களது 124 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காமராஜர் திருவுருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    Advertisement

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார் பேசியதாவது," ஏழை மக்களின் எண்ணங்களை சித்தனைகளை சிந்தித்து அதன் மூலம் திட்டங்களை காமராஜர் தீட்டி உள்ளார். அதனால் தான் இன்றும் அவர் மக்களின் மனதில் உள்ளனர் என தெரிவித்தார்.

    லாக் அப் மரணம்

    லாக் அப் மரணம் நடந்திருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறவில்லை, தமிழகத்தில் ஒரு பக்கம் மின்சார துண்டிப்பு காரணமாக வீதியில் வந்து மக்கள் போராடுகிறார்கள். தமிழகத்தில் ஒரு புறம் பாலியல் குற்றங்கள் மறு புறம் லாக் ஆப் மரணங்கள் தான் உள்ளது.

    அதிமுகவை அழிக்கனும்.. திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தனும்! ஆர்எஸ்எஸ் ப்ளானே அதுதான்! திருமா அட்டாக்!
    Advertisement

    ஜெயக்குமார்

    ஆளும் கட்சி என்று சொன்னால் அவர்கள் போதை பொருட்கள் வைத்து இருந்தால் விடுவித்துவிடலாம் ஈரோடு பவானியிலும் சேலத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் இருப்பவர்கள் போதைப் பொருள் வைத்ததாக கூறி அவர்களை கைது செய்து விடுவித்து விட்டார்கள். ஆனால் நாகர்கோவிலில் ஒருவரை அடித்தே கொன்று விட்டார்கள்.

    வீடு புகுந்து அடிக்குறாங்க.. தமிழிசை வைத்த பகீர் குற்றச்சாட்டு! சிஎம் விஜய்க்கு முக்கிய கோரிக்கை!

    முதல்வர் விஜய்

    இதுவரை முதல்வர் விஜய் எந்த பிரச்சனைக்காவது பத்திரிக்கைகளை சந்தித்து விளக்கம் கொடுத்திருக்கிறாரா அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருப்பாற இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. அரசு இருக்கிறதா தெரியவில்லை. அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை. சாலை வசதி தெரு விளக்கு மின்சார வசதி குடிநீர் பணிகளுக்கு டெண்டர் இன்னும் போடவில்லை.

    Advertisement

    மக்கள் நிலை

    மழைக்காலம் வருவதற்கு முன்னதாகவே பணிகளை முடிக்க முடியாது. தூங்கிக் கொண்டே இருக்கிறது தூக்கத்திலிருந்து எப்போது இந்த விஜய் அரசு தவெக அரசு விழித்துக் கொள்ளும் என்பதுதான் மக்களுடைய கேள்வியாக உள்ளது. உதாரணத்திற்கு மக்கள் சுருக்கமாக வெயிலின் கொடுமை தாங்காமல் தவளை படம் எடுத்து ஆடும் பாம்பு நிழலில் இருக்கும் பாவம் அப்படி ஒரு நிலைமை தான் தமிழ்நாடு மக்களின் நிலைமையாக இருக்கிறது" என தெரிவித்தார்.

    English Summary

    AIADMK leader Jayakumar accuses the Vijay-led government of administrative failure, poor law and order, and neglecting public welfare.