ஆபாசமாக பேசுவோர் தங்கள் குடும்ப பெண்களிடம் கேட்டு பாருங்கள்! உதய் மீது சபாநாயகர் மறைமுக அட்டாக்

  • சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுத்து பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் மீது உரிமைக் குழு விசாரணை நடத்தப்படும் என சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ விளாத்திகுளம் மார்கண்டேயன் பேசினார். அவர் பேசுகையில், கானல் நீராகத்தான் பட்ஜெட் உள்ளது.

    Advertisement

    திமுக திட்டங்களை இந்த அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அது என்ககு மகிழ்ச்சியே. மாற்றத்திற்கான அரசு என கூறிவிட்டு பெயர் மாற்றும் அரசாக உள்ளது என பேசினார்.

    அப்போது அமைச்சர் நிர்மல்குமார் குறுக்கிட்டு, "சட்டசபை குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் மார்க்கண்டேயன் அவதூறாக பேசியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க காலையிலேயே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்" என்றார்.

    இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியிருப்பதாவது: சட்டசபையில் தரமாக பேசும் மார்க்கண்டேயன், பொது வெளியில் அவர் பேசியது சட்டசபை மாண்புக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் எனக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    Advertisement

    மார்க்கண்டேயன் பேசியது நியாயம் என திமுகவினர் கூறினால் என்னிடம் இரு முடிவுகள் உள்ளன. ஒன்று சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மற்றொன்று உரிமைக் குழுவில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கலாம். இப்போது சபை உரிமைக் குழு இல்லை. அது அமைக்கப்பட்ட பிறகு அவர் மீதான விசாரணை நடத்தப்படும். அது போல் ஆபாச பேச்சு பேசுபவர்கள் தங்கள் மனைவி, குடும்ப பெண்களிடம் அது சரியானதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    ஆபாச பேச்சையும் வன்முறையை தூண்டுவதையும் தவிர்க்க வேண்டும். தவறு எங்கே நடந்தாலும் கட்சி தலைமை கண்டிக்க வேண்டும். இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

    Advertisement

    இதையடுத்து திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், "மார்க்கண்டேயன் பேசியது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு பிரச்சனைக்கு இரு இடங்களில் விசாரித்து தண்டனை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றார்.

    இதையடுத்து மார்க்கண்டேயன் பேசுகையில், "முதல்வர் விஜய் பற்றி நான் பேசியதை, திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் என்னை கண்டித்திருந்தனர். "அப்படி பேசியிருக்கக் கூடாது" என்றுதான் எனக்கு அறிவுறுத்தினர். இந்த சட்டசபையின் கதவுகள் பூட்டப்படும் என விஜய், கரூரில் பேசியதால் என்னை அறியாமல் கூறிய அந்த வார்த்தைகளை நீங்கள் அருள் கூர்ந்து மறந்துவிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

    Advertisement

    கோவில்பட்டியில் கடந்த மாதம் நடந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பேசிய விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்கண்டேயன், "சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதை தடுக்க கதவுகள் பூட்டப்படும்" என விஜய் தெரிவித்திருந்தார். சட்டசபையை பூட்டட்டும் விஜய் எலும்புகளை உடைத்துவிடுவோம் என பேசியிருந்தார்.

    இதற்காக அவர் புகாரின் பேரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.

    English Summary

    Speaker JCD Prabhakar says that there will be an action to be taken against DMK MLA Markandeyan who threatens CM Vijay.