என்னோட கட்சியையே வச்சிக்கோங்க.. விஜய்யின் தவெகவில் கட்சியை இணைத்த ஜெகநாத் மிஸ்ரா! யார் இவர்?

  • சென்னை: தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தனது 'நமது மக்கள் முன்னேற்ற கழகம்' கட்சியையே இணைத்துள்ளார். தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்புடன் தொடர்புடைய இந்த ஜெகநாத் மிஸ்ரா யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் வென்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. விஜய் முதல்வராகி உள்ளார். விஜய்யின் இந்த அரசியல் எழுச்சியால் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் விஜய்யின் பக்கம் சாய்ந்துள்ளன.

    Advertisement

    அதேபோல் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்த தவெகவில் இணைந்து வருகின்றனர். அதேபோல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள், பல்வேறு தரப்பு நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

    இந்நிலையில் தான் ஒரு கட்சியே மொத்தமாக தவெகவில் இணைந்துள்ளது. அந்த கட்சியின் பெயர்
    'நமது மக்கள் முன்னேற்ற கழகம்'. இந்த கட்சி கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மதுரையில் வெளியிடப்பட்டது. இக்கட்சியின் நிறுவன தலைவராக பிஎல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளார்.

    ஜெகநாத் மிஸ்ரா ஜாதி அமைப்பான தேசிய செட்டியார் பேரவையின் தலைவராக இருந்தார். அதன்பிறகு தான் இந்த கட்சியை தொடங்கினார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஜெகநாத் மிஸ்ராவிற்கு தேனி மாவட்டம் கம்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிட தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கைகோர்த்தார்.

    Advertisement

    தவெக சார்பில் கம்பம் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 85,394 ஓட்டுகள் வாங்கினார். சிட்டிங் எம்எல்ஏவாக களமிறங்கி ராமகிருஷ்ணன் 84,643 ஓட்டுகள் வாங்கி 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தலில் 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெகநாத்மிஸ்ரா இன்று தனது கட்சியான 'நமது மக்கள் முன்னேற்ற கழகத்தை' தவெகவில் இணைத்துள்ளார்.

    English Summary

    Reports indicate that Cumbum MLA Jeganathmishra is set to merge his party, ‘Namadhu Makkal Munnetra Kazhagam', with TVK (Tamilaga Vettri Kazhagam), led by Vijay.