சென்னை: சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள சீன் படத்தில், கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது வந்துள்ளேன் என்று வசனம் வரும். முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் இந்த வசனம் இருப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், இது தொடர்பாக இயக்குநர் ஜித்து மாதவன் விளக்கமளித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் சீன் படம் வெளியாகியுள்ளது. 'ரோமாஞ்சம்', 'ஆவேசம்' போன்ற பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ் என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே இந்த படத்தில் ஒரு இடத்தில்.. "கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே வருகிறேன்" என்பது போல சூர்யா பேசியிருப்பார். இது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை விமர்சிக்கும் வகையில் வைக்கப்பட்டதா என்று இயக்குநர் ஜித்து மாதவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் திரைக்கதை எழுதும்போது இதெல்லாம் (விஜய் அரசியல் வருகை) எதுவுமே நடக்கவில்லை. இதையெல்லாம் திட்டமிட்டு வைக்கவில்லை. சொல்லப்போனால் படத்தின் கதையையே எழுதி முடித்த பிறகுதான் விஜய் அரசியலுக்கு வந்தார். நாங்கள் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்த சமயத்தில் அவர் முதலமைச்சராகவே ஆகிவிட்டார். எனவே, விஜய் அரசியலுக்கு வந்ததை கிண்டல் செய்யவோ, விமர்சிக்கவோ அந்த வசனத்தை வைக்கவில்லை. மாறாக அவரை பாராட்டும் விதமாகவும், கௌரவிக்கும் வகையிலும்தான் அந்தக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஊரே அவர் அரசியலுக்கு வந்ததை வரவேற்றது. யாரையும் நேரடியாக தாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை" என்று விளக்கமளித்தார். இந்த வசனம் இருப்பதால் சூர்யா அரசியலுக்கு வருவதாக எடுத்து கொள்ளலாமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், "அப்படி எல்லாம் எடுத்து கொள்ள முடியாது.. படத்தில் பேசியது எல்லாம் உண்மையா?" என்றார். சூர்யா குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில், "சூர்யா மிக பெரிய நடிகர். அவருக்கு தனியாக எந்தப் பயிற்சியும் தேவையில்லை. இந்தப் படத்தில் அவர் நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் முக்கியமான விஷயங்களை யாரும் இப்போதே சொல்லிவிட வேண்டாம். அனைத்து ரசிகர்களுக்கும் அந்த ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்" என்றார். இதற்கிடையே படத்தின் வசூல் இலக்கு குறித்துப் பேசிய படக்குழு, "இந்தாண்டு இதற்கு முன்பு ரிலீஸான சூர்யாவின் இரு படங்கள் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளன. ரூ.1,000 கோடி என்ற வரலாற்று சாதனையை எட்டுவதற்கு இன்னும் ரூ.350 கோடிதான் தேவைப்படுகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்பை பார்க்கும்போது, அந்த இலக்கை மிக எளிதாக எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு மற்றும் அமைச்சர்களுக்கும், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் முன்பதிவு தொடங்கிய உடனேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளன" என்றார்கெரியரின் உச்சம்
தேவா வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா.. ஸ்ரீகாந்த் தேவாவை அணைத்து ஆறுதல்! நெகிழ வைத்த காட்சி
விஜய்யை குறிவைத்து வசனம்
அரசியலுக்கு வரும் சூர்யா?
மதுரை ரவுடி 'குட்டி சாக்கு' என்ற சூர்யா படுகொலை.. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ரூ.1000 கோடி டார்கெட்