NDA கூட்டணியில் 2வது விக்கெட்.. வெளியேறும் தமமுக.. ஜான் பாண்டியன் அறிவிப்பு!

  • சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து 2வது கட்சியாக NDA கூட்டணியில் இருந்து விலகுகிறது ஜான் பாண்டியன் தலைமையிலான தமமுக. அதிமுகவில் இருந்து தவெக செல்வோர் அனைவரும் கொள்ளைக்காரர்கள், அவர்களை சேர்த்தால் அழிவுதான் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், என்.டி.ஏ கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்டது தமமுக. ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் தோல்வியைச் சந்தித்தார்.

    அதற்கு முன்பாக கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் தமமுக தலைவர் ஜான் பாண்டியன்.

    English Summary

    John Pandian, leader of the Tamilaga Makkal Munnetra Kazhagam (TMMK), has announced the party's withdrawal from NDA. He stated that a decision regarding contesting the local body elections in alliance with TVK would be taken after convening the general council.