Sarathkumar: பழைய விஷயத்தை பிடித்து ஏன் தொங்குறீங்க! தவெக நினைத்தால் என்ன நடக்கும்? சீறிய பிரமுகர்!

  • சென்னை: அமைச்சர் சரத்குமார் போதை மருந்து உட்கொண்டதாக ஒரு பழைய வீடியோவை எடுத்துப் போட்டு திமுகவினர் விமர்சனம் செய்து வருவது எதிர்க்கட்சிக்கு அழகல்ல என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். பழைய வீடியோவாக இருந்தாலும் அது தவறுதான். ஆனால் அது போன்று எதிர்க்கட்சியினர் தொடர்புடைய பழைய வீடியோக்களை தவெகவினர் எடுத்துப் போட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கும் அமைச்சரின் பழைய வீடியோ சர்ச்சை குறித்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை இப்போது கிளறுவது ஏன் என்ற கேள்வியை முன்வைக்கும் அவர், இது ஒரு முடிவற்ற அரசியல் பழிவாங்கல் படலமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறார்.

    திமுக அமைச்சரின் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையாளும் விதம் குறித்துப் பேசிய மணி, 76 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட ஒரு பெரிய கட்சியால் தங்களின் தோல்வியையும், விஜய் முதலமைச்சரானதையும் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த அளவுக்குப் பதற்றம் இருந்திருக்காது. அமைச்சர் தரப்பில் அது குழந்தைக்கு மருந்து கொடுத்த வீடியோ என்று விளக்கம் அளிக்கப்பட்டாலும், முதலமைச்சர் விஜய் இது குறித்து மௌனம் காப்பது சரியல்ல என்கிறார் மணி.

    Advertisement

    ஒருவேளை அந்த அமைச்சர் தவறு செய்திருந்தால் அவரை நீக்க வேண்டும், இல்லையெனில் முதலமைச்சர் அதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக் காட்ட ஆயிரம் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இருக்கும்போது, பழைய வீடியோக்களைப் பிடித்துத் தொங்குவது ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சிக்கு அழகல்ல.

    குறிப்பாக, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற கிராமப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தனிநபர் விமர்சனங்களில் இறங்குவது பலனளிக்காது. பள்ளிக் கல்வித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து ஸ்ரீதர் வேம்பு போன்றவர்கள் முன்வைத்த புகார்களை அரசு சட்டரீதியாக அணுக வேண்டும்.

    Advertisement

    வெறும் சமூக வலைதளப் போர்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அவதூறு வழக்குத் தொடர்ந்து உண்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் திமுக அரசுக்கு இருக்கிறது.

    விஜய் தலைமையிலான தற்போதைய அரசு ஊழலை ஒழிக்க நினைத்தால், அதற்கு ஒரு முறையான செயல்திட்டம் (Action Plan) தேவை என்கிறார். 1996-ல் கருணாநிதி, ஜெயலலிதா மீதான வழக்குகளை ஒவ்வொன்றாகச் செதுக்கியது போல, சட்ட நுணுக்கங்களுடன் அணுகினால் மட்டுமே ஊழலை வேரறுக்க முடியும்.

    தமிழக சட்டசபையில் விஜய்க்கு கிடைத்திருக்கும் 107 இடங்கள் என்பது ஒரு அற்புதமான வாய்ப்பு. மெஜாரிட்டி இல்லாத நிலையில், "நான் ஆள் பிடிக்க மாட்டேன், முடிந்தால் ஆட்சியைப் கவிழ்த்துக் கொள்ளுங்கள்" என்று அவர் சவால் விட்டிருந்தால், அது ஒரு மாற்று அரசியலாகப் பார்க்கப்பட்டிருக்கும்.

    Advertisement

    தற்போது குதிரை பேரம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா குறித்த பேச்சுகள் எழுவது விஜய்யின் பிம்பத்திற்குச் சறுக்கலைத் தரும் என்கிறார். வைகோ போன்ற மூத்த தலைவர்கள் வெளிப்படையாகப் பேசுவது விஜய்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மத்தியில் இது ஒரு சராசரி அரசியல் நகர்வாகவே பார்க்கப்படும் என மணி தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Sarathkumar faced criticism after DMK supporters circulated an old video, but journalist Mani said such personal attacks are inappropriate and not suitable political conduct.