சின்ன பிள்ளைங்க அவரு! சீக்கிரமே திமுகவில் சேர்ந்துடுறேனு சொன்னவர்தான் துரை வைகோ! உடைத்த கே.என்.நேரு

  • சென்னை: என்னால் மதிமுகவை நடத்த முடியாது, திமுகவிலேயே வந்து சேர்ந்துவிடுகிறேன் என சொன்னவர்தான் துரை வைகோ என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது: திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என சொன்னவர்தான் துரை வைகோ.

    Advertisement

    சின்னப்பிள்ளையாக இருந்து கொண்டு ரொம்ப அதிகமாகவும் பேசுகிறார். என் அப்பா கோபக்காரர், என்னால் கட்சி நடத்த முடியாது. கொஞ்சம் பொறுங்கள், நான் திமுகவிலேயே இணைந்து விடுகிறேன் என சொன்னவர், இப்போது மாற்றி பேசுகிறார்.

    தான் பிறப்பதற்கு முன் நடந்த மிசா குறித்தெல்லாம் பேசியுள்ளார். அவரது வயதுக்கு ஸ்டாலின் குறித்து பேசுவதெல்லாம் மிகவும் தவறு என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    மதிமுகவில் அதிகாரங்களையும் முடிவுகளையும் வைகோ எடுக்கும் வரை கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை, ஆனால் துரை வைகோ கட்சியின் முதன்மை செயலாளராக வந்தது முதல் கட்சி போட்டியிடும் சின்னத்தில் இருந்து பிரச்சனை தொடங்கியது.

    Advertisement

    பம்பரம் சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சி கடந்த 2024 மக்களவை தேர்தல் முதல் தனிச்சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட மதிமுகவுக்கு 4 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கடையநல்லூர், சீர்காழி ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் வென்றது. அதிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

    இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக, தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து திமுக குறித்து துரை வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    அந்த வகையில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக எம்பி துரை வைகோ பேசியதாவது: "எனது எம்பி பதவி, திமுக போட்ட பிச்சை என்கிறார்கள். திமுகவையும் அதில் இருப்பவர்கள் பலரையும் நான் மதிக்கிறேன். கட்சிக்காக உழைத்து வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த தொண்டர்களும் இருக்கிறார்கள்.

    Advertisement

    தேர்தல் வரும் போது கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு உழைப்பை வைத்து மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுகிறோம். இது யாரும் போடுகிற பிச்சை இல்லை. அவர்கள் என்ன மன்னர்களா, சக்கரவர்த்திகளா, இது என்ன அவர்கள் போடும் பிச்சையா?

    20- 30 இயக்கங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து அதில் திமுக உழைப்பும் பிரதானமானதுதான். அதை மறுக்கவில்லை. ஆனால் மக்கள் வாக்களித்ததால்தான் எம்பியாக வெற்றி பெற்றோம். இவர்கள் போட்ட பிச்சையால் இல்லை.

    அடுத்து வரும் தேர்தலிலும் கூட பார்ப்போம். தேர்தலில் அவர்களும் நிற்கட்டும். யார் போடுகிற பிச்சை என பார்ப்போம். மக்கள்தான் எஜமானவர்கள். எனக்கு திமுக போட்ட பிச்சை என கூறுவதுதெல்லாம் தவறான கருத்து, இதுதான் ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிரானது.

    Advertisement

    இதுதான் பண்ணையார் அரசியல், பண்ணையார் அரசியல் கூடாது என்றுதான் 1967 ஆம் ஆண்டு அண்ணா மாற்றத்தைக் கொண்டு வந்தார். சாதாரண எளியவர்கள்கூட எம்எல்ஏ, எம்பிக்கள் ஆனார்கள். ஆனால் அதே பண்ணையார் அரசியல் இன்று திராவிட இயக்கங்களில் வந்துவிட்டது.

    இப்போதெல்லம் சமானியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர் எந்த சாதி, எவ்வளவு முதலீடு போடுவார் என்றுதான் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்தான் முதல்வர் விஜய். அவர்தான் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

    லஞ்ச, லாவண்யம் இல்லாத ஒரு அரசாங்கத்தையும் அவர் கொடுத்துள்ளார். எனவே பிச்சை என்ற வார்த்தையெல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் சொல்கிற மாதிரியே பிச்சை போட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் கொளத்தூரில் திமுக தலைவருக்குக் கூட மக்கள் பிச்சை போடவில்லையே, அதற்கு என்ன சொல்வார்கள் என துரை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசுகையில் விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் திமுக தலையீடு இருந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் அக்கட்சியின் சில வேட்பாளர்களை பொருத்தமட்டில் திமுக தீர்மானித்ததுதான். இவருக்கு கொடுங்க, அவருக்கு கொடுங்கன்னு காங்கிரஸை கட்டாயப்படுத்தினாங்க. இது போன்ற ஒரு விவகாரங்களால்தான் காங்கிரஸ் தலைமைக்கு திமுக மீது ஒரு வெறுப்பு வந்தது என துரை வைகோ தெரிவித்திருந்தார்.

    English Summary

    Ex Minister K.N.Nehru criticises Durai Vaiko that he has once told, he would join in DMK soon as he couldnot run his party as his dad is angry man.