K N Nehru: 170 ஆவணங்கள்.. கே என் நேரு வீட்டில் நடந்த சோதனையில் சிக்கியது என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

  • சென்னை: திமுக முன்னாள் செயலாளரும், திமுக முதன்மை செயலாளருமான கே என் நேரு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்நிலையில் சோதனை குறித்து அறிக்கையினை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கேஎன் நேரு தொடர்புடைய 25 இடங்களில் சோதனை நடந்ததாகவும், இதில் 170 ஆவணங்கள் மற்றும் 13 மின்னனு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் கே என் நேரு. அப்போது நகராட்சித்துறையில் 2,538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    Advertisement

    இதனை எதிர்த்து கே என் நேரு தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலையிலேயே கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேஎன் நேருவின் திருச்சி தில்லைநகர் வீடு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, கோவை, நெல்லை என தமிழகம் முழுக்க 25 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே.. இந்த ரெய்டு! - கே.என்.நேரு

    சுமார் 7 மணி நேரம் இந்த சோதனை நடந்ததாக தகவல் வெளியானது. இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, நாமக்கல் உள்ளிட்ட 25 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.

    Advertisement
    சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே.. இந்த ரெய்டு! - கே.என்.நேரு

    இந்த சோதனைகளின் போது கே என் நேருக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து 170 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் 13 மின்னனு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து பேட்டியளித்த கே என் நேரு எங்கள் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலை, குற்றங்கள் நடைபெறுகின்றன. இதனை திசை திருப்பவே இந்த சோதனை நடைபெற்று இருக்கலாம் என்று கூறினார்.

    English Summary

    K N Nehru: Raids were conducted today by the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) at various locations linked to K. N. Nehru, a senior DMK leader and the party’s principal secretary. Following the operation, the DVAC released a report stating that searches were carried out at 25 locations associated with him, during which 170 documents and 13 electronic devices were seized.