சொந்த வீட்டிற்கே வீட்டு வாடகை! வேணானு எழுதி கொடுப்பாரா? நேரு கேட்டதும் சிரித்து மழுப்பிய ஆதவ்

  • சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொந்த வீட்டில் இருந்து கொண்டு அரசு வேலை பார்ப்பதால் அவர் அரசாங்கத்திடம் இருந்து வீட்டு வாடகை வசூல் செய்கிறாரே, அதை வேண்டாம்னு எழுதி கொடுக்க ரெடியா என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கேட்டதும் ஆதவ் பதில் சொல்ல முடியாமல் சிரித்தே மழுப்பியதை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    அனைத்து எம்எல்ஏக்களும் கார் என முதல்வர் விஜய் அறிவித்தாலும் அறிவித்தார், அன்று முதல் கார் குறித்த விவாதங்கள் டீக்கடைகள், முடித்திருத்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசியல் பேசக் கூடாது என எழுதி போட்டிருந்தாலும் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    கார், இன்னோவா கார், கேட்ட எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பை எடுத்து பார்த்தால் தலையே சுத்துகிறது. அந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள். இருப்பினும் காரே இல்லை என விஜய்யை ஏமாற்றி கார் கேட்டு தற்போது டெஸ்ட் டிரைவ் வரை போயிருக்கிறது.

    கஜானா காலி என அரசு சொல்லியிருக்கும் நிலையில் கடன் வாங்கி கார் வாங்க வேண்டுமா என திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரங்கள் இணையதளத்தில் கிடைப்பதால் அதை வைத்து சமூகவலைதளத்தில் டிஸ்கஷனே நடைபெறுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சட்டசபையில் கார் குறித்த விவாதம் எழுந்து.

    Advertisement

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கஜானாவை காலி செய்துவிட்டோம் என கூறிவிட்டு பிறகு எதற்காக எல்லா எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குகிறீர்கள்.

    அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் கொடுக்கும் கார்களை திமுக எம்எல்ஏக்கள் 59 பேரும் பெற மாட்டார்கள். பொருளாதாரத்தில் நலிந்துள்ள எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் கொடுக்கலாம்" என உதயநிதி தெரிவித்தார்.

    அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, கார் கொடுப்பதை உதயநிதி ஸ்டாலின் ஏதோ ஆடம்பரமாகவும், அரசியல் செய்யவும் பார்க்கிறார். அது அப்படி கிடையாது. தவெக எம்எல்ஏக்களிடம் கூட கார்கள் இருக்கின்றன.

    Advertisement

    எனவே கார் இருக்கும் நாங்களும் கார்களை வாங்க மாட்டோம். யாருக்கெல்லாம் இல்லையோ அவர்கள் கடிதம் கொடுத்தால் அவர்களுக்கு கொடுப்பார்கள். நிறைய சட்டசபை உறுப்பினர்கள் ஏழ்மை பின்னணியில் இருக்கிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலினிடம் 2,3 பங்களாக்கள் இருக்கின்றன. எனினும் அரசு பங்களா வேண்டும் என நான் பொதுப் பணித் துறை அமைச்சர் என்பதால் அவர் என்னிடம்தான் கடிதம் கொடுத்திருந்தார்.

    அவரிடம்தான் 2, 3 பங்களா இருக்கே ஏன் அரசு பங்களா கேட்கிறார் என கேட்க முடியுமா? வீட்டை காட்டிலும் அரசு பங்களா என்றால் அங்கு நிறைய பொதுமக்கள் வந்து சந்திக்கலாம். மனு கொடுக்கலாம் என்ற அடிப்படையில்தான் பங்களா வழங்கப்படுகிறது.

    Advertisement

    அது போல் சட்டசபை உறுப்பினர்களும் அவர்களது தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும். அப்படியிருக்கும் போது அவர்களுக்கு கார் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்பதால்தான் கார் கொடுக்கிறோம். இதில் ஆடம்பரம் இல்லை" என்றார். மேலும் கார் இல்லை, வீடு இல்லை, 10 ஆயிரம் மட்டும் பணம் இருப்பதாக கூறிவிட்டு ரேஞ்ச் ரோவரில் காரில் வருகிறார்கள் என ஆதவ் மறைமுகமாக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தார்.

    உடனே குறுக்கிட்ட கே.என்.நேரு, "கார் இல்லை, வீடு இல்லை, 10 ஆயிரம் மட்டும் இருக்குனு பிரமாண பத்திரத்தில் சொல்லியிருக்கிறோம், அது தவறு என்றால் எங்கள் மீது வழக்கு போடுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானவர், அமைச்சர்களுக்கு கொடுக்கும் அனைத்து வசதிகளும் அவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது புரோட்டோகால், அரசுக்கு செலவை குறைக்க நாங்கள் கார் வேண்டாம் என்றுதானே சொன்னோம். அதற்காக ஏன் 2, 3 பங்களா இருக்கிறது என்றெல்லாம் ஆதவ் பேசுகிறார். அமைச்சர் ஆதவ் சொந்த வீட்டில் இருக்கிறார், அதற்கு அரசாங்கம் வாடகை கொடுக்கிறது. அது அவருக்கு தெரியுமா, ஏன் வாடகையை வேண்டாம் என சொல்லிவிடுவாரா" என கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    அதுவரை பொங்கிய ஆதவ் உடனே என்ன சொல்வது என தெரியாமல் சிரித்தபடியே "நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்" என தெரிவித்தார். இது வைரலாகி வருகிறது.

    English Summary

    Ex Minister K.N.Nehru thug life reply to Minister Aadhav Arjuna in house rent allowance which he couldt speak after that.