“பழிவாங்கும் அரசியலால் பலன் இல்லை” உடைத்து பேசிய கி.வீரமணி! தவெக கவனிக்கனும்!

  • சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், பழிவாங்கும் அரசியலால் பலன் இல்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    "பழிவாங்கும் அரசியலால் எந்த பயனும் இல்லை. நெருக்கடி காலத்தையே திமுக சந்தித்திருக்கிறது. முதலமைச்சர் விஜய் சினிமாவிலிருந்து வெளி வந்திருந்தாலும், இன்னும் சினிமா மனநிலையிலிருந்து வெளிவரவில்லை" என்று கி.வீரமணி விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    தவெகவின் ரெய்டு

    திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவி வகித்து வந்தார். அவரது காலத்தில் நெடுஞ்சாலை போடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்திருந்தன. இதை தொடர்ந்துதான் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.

    ஆனால் இந்த ரெய்டு நடவடிக்கை பழிவாங்கும் செயல் என்று திமுக விமர்சித்திருக்கிறது. இந்த விமர்சனங்களை தொடர்ந்துதான் தற்போது, கி.வீரமணியும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

    ரெய்டு ஏன்?

    எ.வ.வேலு அமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை விரிவாக்கம் நடைபெற்றது. குறிப்பாக திருப்பதி-சென்னை நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இந்த விரிவாக்கத்திற்கு தேவையான சவ்வூடு மண் எங்கிருந்து எடுக்கப்பட்டது? என்பதுதான் குற்றச்சாட்டு.

    Advertisement

    திருத்தணியை ஒட்டியுள்ள ஏரிகளிலிருந்து மண் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏரியில் 5 அடி வரை மட்டுமே மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டடிருந்தது. ஆனால், அனுமதியை மீறி 12 அடி வரை மண் அள்ளியதாகவும், மண் அள்ளுவதற்காக விநியோகிக்கப்படும் டோக்கன் ரசீதில் முறைகேடு செய்து மண் எடுக்கப்பட்டதாகவும் புகார் இருந்தது.

    இப்படி பல பகுதிகளில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில்தான் தற்போது விசாரணையும், ரெய்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    English Summary

    K Veeramani Warns Against Politics of Revenge: State Vigilance and Anti-Corruption police conducted raids yesterday at premises belonging to former Minister E.V. Velu. Amidst this, Dravidar Kazhagam leader K. Veeramani has stated that there is no benefit to the politics of vendetta.