கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. 6 மாதமாக வராத பணம்! கந்துவட்டி பிடியில் லட்சம் குடும்பம்.. நடப்பது என்ன

  • சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டம் பற்றின ஒரு கோரிக்கைதான் பயனாளிகளிடமிருந்து வெளிவர துவங்கி உள்ளது.. தமிழக ஊரகப் பகுதியில் எளிய மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பெயர் மாற்றம் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதி முடக்கத்தை சந்தித்துள்ளதாக தெரிகிறது.. பணி ஆணை பெற்றும் நிதி விடுவிக்கப்படாததால், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கந்துவட்டிப் பிடியில் சிக்கித் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தமிழக ஊரக பகுதிகளில் வீடற்ற ஏழை எளிய மக்களின் சொந்த வீட்டின் கனவை நனவாக்கும் நோக்கில் தொடக்கப்பட்ட திட்டம் தான் "கலைஞர் கனவு இல்லம்".

    Advertisement

    கலைஞர் கனவு இல்லம் திட்டம்

    2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2030-க்குள் தமிழகத்தை குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்றுவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. ஆண்டிற்கு ஒரு லட்சம் வீடுகள் வீதம், 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

    ஆனால் இப்போதுள்ள சூழலில் இந்த திட்டம் பெரும் நிதி நெருக்கடியிலும், நிர்வாக முடக்கத்திலும் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகியும் நிதி விடுவிக்கப்படவில்லை.

    Advertisement

    அஸ்திவாரம், மேற்கூரை, இறுதி வடிவம்

    அஸ்திவாரம், மேற்கூரை, இறுதி வடிவம் என 3 கட்டங்களாக வழங்கப்படும் நிதியை நம்பி, ஏழை மக்கள் தங்களது அரைகுறை வீடுகளைக் கட்டி நிறுத்தியிருக்கிறார்கள்.. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள இந்த மக்களுக்கு, தற்போது அடுத்தகட்ட கட்டுமான பணிகளை தொடரவும் வழியில்லை... வாங்கிய பொருட்கள் மற்றும் தொழிலாளர்களின் கூலிக்காக, கந்து வட்டிக்கு கடன் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வட்டியை கட்ட முடியாமல் நிறைய பேர் தங்களது அரைகுறையாகக் கட்டப்பட்ட வீடுகளையே அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் கந்துவட்டி காரர்களிடமே வீடுகளை இழக்கும் துயரமும் அரங்கேறி வருகிறது. நாள்தோறும் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு படையெடுக்கும் மக்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அதிகாரிகளும் திணறி வருகிறார்களாம்.

    Advertisement

    "வெற்றி வீடு கட்டும் திட்டம்"

    இதனிடையே, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த திட்டத்தின் பெயர் "வெற்றி வீடு கட்டும் திட்டம்" என மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, பயனாளிகளின் வாழ்வாதார பிரச்சினைக்கு விடிவு கிடைக்கவில்லை என்ற புகார்கள் வெடித்து கிளம்பியுள்ளன.. அதுமட்டுமல்ல, ஆண்டிற்கு ஒரு லட்சம் வீடுகள் என்ற இலக்கு 70 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நிதி தொகையை ரூ. 3.55 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியிருந்தாலும், அதற்கான முறையான வழிகாட்டுதல்களோ அல்லது ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடோ இன்னும் வழங்கப்படவில்லை என்ற புகாரும் முளைத்துள்ளது.

    Advertisement

    அரசாங்கத்தின் பெயர் மாற்றமும், அதிகாரிகளின் இழுபறி போக்கும் ஏழை எளிய மக்களின் சொந்த வீட்டுக் கனவை சுக்குநூறாக உடைத்துள்ளதால், உடனடியாக அரசு தலையிட்டு முடங்கிக் கிடக்கும் நிதியை விடுவிக்க வேண்டும் என்பதே தவிக்கும் பயனாளிகளின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது...!!

    English Summary

    Kalaignar Kanavu Illam Scheme.. 6 Months Without Payment! 1 Lakh Families in Debt Trap.. What Happened?