“போராளி ஓய்வதில்லை”.. ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம்!

  • சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 8வது ஆண்டு நினைவுநாளையொட்டி கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இன்று "போராளி ஓய்வதில்லை" என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசியல், பத்திரிகை, நாடகம், இலக்கியம், சினிமா என அத்தனை துறைகளிலும் பிரகாசித்த சூரியன் கலைஞர் கருணாநிதி. அதிகாலையில் எழுந்து நள்ளிரவு வரை உழைத்தவர். ஓய்வறியாப் போராளி எனப் புகழப் பெற்றவர்.

    Advertisement

    1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், சுமார் 50 ஆண்டுகள் திமுக தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர் கலைஞர் கருணாநிதி. ஓயாத உழைப்பாளி.. ஒப்பற்ற படைப்பாளி... கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று. அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    Advertisement

    முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வரை 'அமைதிப் பேரணி' நடைபெற்றது. இதன் நிறைவாக, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    கருணாநிதியின் நினைவு நாள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
    அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
    ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
    13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
    அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
    நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!

    Advertisement

    அரசியலும் ஆட்சியும்,
    கலையும் இலக்கியமும்,
    திரையும் நாடகமும்,
    சின்னத்திரையும்
    சமூக வலைத்தளமும் என
    அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!

    கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
    அவர்தான் நமக்கு எல்லாம்!
    அவரின்றி நாம் இல்லை!" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    On the occasion of the 8th death anniversary of the late former Chief Minister of Tamil Nadu, Kalaignar Karunanidhi, his memorial has been decorated with flowers today bearing the inscription "A Warrior Never Rests."