கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் மதுரை பெண்கள் முற்றுகை! 2023 மனு என்ன ஆனது?

  • சென்னை: மதுரை மாவட்டம் புலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து கண்ணீருடன் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த 2023-ம் ஆண்டிலேயே இது தொடர்பாக முறையாக மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெண்கள் ஆதங்கத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.. மதுரையில் என்னதான் நடந்தது?

    Advertisement

    தமிழக அரசு சார்பில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பல இல்லங்களில் பொருளாதார ரீதியாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..

    Advertisement

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

    அத்தியாவசியத் தேவைகளுக்கு இந்தத் தொகை பெரும் துணையாக இருந்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் புலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    குறிப்பாக, இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலேயே தகுதியுடைய தாங்கள் விண்ணப்பித்ததாகவும், கடந்த 2023-ம் ஆண்டிலேயே இது தொடர்பாக முறையாக மனு அளித்தும் இன்றுவரை தங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்பது இவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து தங்களது குறைகளை அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டனர்..

    Advertisement

    பெண்களுக்கு பணம் வரலியா

    வழக்கமாக மாதத்தின் குறிப்பிட்ட தேதியில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் இந்தத் தொகை, இந்த மாதம் வரவு வைக்கப்படவில்லை என்று அப்பெண்கள் ஆதங்கப்படுகின்றனர்.. தாங்கள் முறையாக விண்ணப்பித்திருந்தும், சிலருக்கு தொடக்கத்தில் பணம் வந்து நின்று போனதும், சிலருக்கு இதுவரை ஒருமுறை கூட வரவில்லை என்பதும் இவர்களின் முக்கிய புகாராக உள்ளது.

    2023-ம் ஆண்டிலேயே மனு கொடுத்தும் பலன் கிடைக்காதது ஏன் எனத் தெரியாமல், தகுதியுள்ள பயனாளிகள் பலரும் இத்திட்டத்தின் பலன்களைப் பெற முடியாமல் அவதிப்படும் சூழல் நிலவுகிறது.. அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் இந்தத் திட்டத்தை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள நிலையில், பணம் வராதது இவர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது..

    Advertisement

    மதுரை புலிப்பட்டி பெண்கள்

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட புலிப்பட்டி பெண்கள், தாங்கள் குடும்ப வறுமை நிலையில் இருப்பதாகவும், தகுதியான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகும் இத்திட்டத்திலிருந்து தங்களை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    பலமுறை இ-சேவை மையங்களுக்குச் சென்றும், அங்கு முறையான பதில்கள் கிடைக்காததால், இறுதியில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இதனை எடுத்துச் செல்ல முடிவு செய்ததாகப் பல பெண்கள் கூறினர்.. தங்களுக்கு மீண்டும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது..

    அரசு நலத்திட்டம்

    இது குறித்து மாவட்ட நிர்வாகத் தரப்பில், வங்கிக் கணக்கு விபரங்களில் மாற்றம் அல்லது வருமான வரித் தாக்கல் தொடர்பான தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகக் குறிப்பிட்ட சிலருக்குத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

    Advertisement

    இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக சொல்லும் அதிகாரிகள், புகாரளித்த புலிப்பட்டி பெண்களின் விண்ணப்பங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, தகுதியுடையவர்களுக்கு விரைந்து தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர்..

    நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி நின்றதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய இத்திட்டம், தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். தொழில்நுட்ப சிக்கல்களை விரைந்து தீர்ப்பதன் மூலம் மட்டுமே, இத்தகைய புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது...!!

    English Summary

    Kalaignar Magalir Urimai Thogai Delay in Madurai! Women Protest at Collector Office Over 2023 Pending Payments